ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் எஸ்.கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா, அகல்யா வெங்கடேசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிர்வாகம் பொறுப்பல்ல’
நாயகன் கார்த்தீஸ்வரன் தன்னுடன் ஆதவன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவை வைத்து கொண்டு மோசடி வேலையில் இறங்குகிறார். முதலில் பிளாக் பாண்டி ஏமாற்றி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்கிறார்கள்.
இதனையடுத்து நாயகன் கார்த்தீஸ்வரன் லிவிங்ஸ்டன் மற்றும் பலரை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் சம்பாதித்து அதை வெளிநாட்டு வங்கியில் போடு வைக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பலர் காவல் நிலையம் செல்ல அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் புகார் கொடுக்கிறார்கள்.
இந்த வழக்கை ஸ்ரீநிதி தீவிரமாக விசாரிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீநிதியின் தோழியான நாயகி மிருதுளா நாயகன் கார்த்தீஸ்வரன் மூலம் பல கோடி ரூபாய் ஏமாற்றப்படுகிறார். நாயகி மிருதுளா உதவியுடன் நாயகன் கார்த்தீஸ்வரனை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி நெருங்குகிறார்
இறுதியில் நாயகன் கார்த்தீஸ்வனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி கைது செய்தாரா ? இல்லையா? நாயகன் கார்த்தீஸ்வரன் திருந்தினாரா? இல்லையா? என்பதே ’நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் மோசடி மன்னன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரே இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். காதல், நடனம், காமெடி, சண்டை என அனைத்திலும் அதிரடி காட்டியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மிருதுளா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.
நாடு முழுவதும் நடக்கும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் மோசடிகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் நாயகன் கார்த்தீஸ்வரன். இத்திரைப்படத்தில் பல்வேறு மோசடிகளைக் காட்டி, அதை எப்படிச் செய்கிறார்கள்? என்பதை மட்டும் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். பொதுமக்கள் எப்படி எல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’நிர்வாகம் பொறுப்பல்ல’ – கவனம் தேவை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : எஸ்.கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா, அகல்யா வெங்கடேசன்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : என்.எஸ்.ராஜேஷ்
இயக்கம் : எஸ்.கார்த்தீஸ்வரன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்