எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரிப்பில் இயக்குனர் தினகரன்.எம் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, கோபலன் பிரகதேஷ், வினோதினி வைத்தியநாதன்,அஞ்சலி ராவ், ஸ்ரீராம் எம் , இந்திரஜித் ஆகியோர் நடிப்பில் கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ’ரேகை’ ஜி5 ஓடிடி தளத்தில் 28ஆம் தேதி வெளியாகிறது..
குற்றாலத்தில் மாணவர் தங்கும் விடுதியில் மாணவர் ஒருவர் அதிகாலையில் குளிக்கும் போது முச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிடுகிறார். இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் விசாரிக்கிறார், அவருக்கு உதவியாக போலீஸ் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனி இருக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் விசாரணையில் இறந்து போனவரின் கைரேகை நான்கு பேருக்கு பொருந்துகிறது. அந்த ரேகை தொடர்பாக பால ஹாசன் விசாரணையில் சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது.
எந்தவித தடயங்களும் இல்லாமல், குறிப்பாக பிரேத பரிசோதனையில் கூட எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டியிருக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் – பவித்ரா இருவரும் காதலிக்க சிறு பிரச்சனையால் பவித்ராவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இறுதியில் சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் கொலைகாரனை கண்டுபிடித்தாரா ? இல்லையா? சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் – பவித்தா இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா? என்பதே ’ரேகை’ வெப் சீரிஸ் மீதிக்கதை.
சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பாலஹாசன் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார், காதல்,பாசம், செண்டிமெண்ட் , சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்
போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவித்ரா ஜனனி கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். டாக்டராக நடித்திருக்கும் வினோதினி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாபின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. மகேந்திரா எம்.ஹெண்ட்ரி ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
நான்கு கொலைகளை மைய கருவாக வைத்து இந்த வெப் சீரியஸை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தினகரன்.எம் இந்த கதையில் ஆரம்பம் முதல் இறுதியிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ரேகை’ – சஸ்பென்ஸ் திரில்லர்
மதிப்பீடு ; 3.5/5
நடிகர்கள்: பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்யநாதன்
இசை: ஆர் எஸ் ராஜ் பிரதாப்
இயக்கம்: தினகரன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)