ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி அஜித் இயக்கத்தில் உதய தீப், ஆதேஷ் பாலா, யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சாவீ’.
நாயகன் உதய தீப், பல வருடங்களுக்கு முன் இறந்த தனது அப்பாவின் மரணத்திற்கு தனது 2 மாமன்கள் தான் காரணம் என்று நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். தனது இளைய மாமாவான பிரேம் கே.சேஷாத்ரி மகள் கவிதாவை உதய தீப் காதலிக்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க இவர்களின் காதல் விவகாரம் கவிதாவின் அப்பாவான பிரேம் கே.சேஷாத்ரிக்கு தெரியவர கவிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்பாராத விதமாக அவரது மாமன் பிரேம் விபத்தில் இறந்து விடுகிறார்.
பிரேம் கே.சேஷாத்ரி உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் உறங்கிவிட, பிணத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பானது உதயாவிடம் கொடுக்கப்படுகிறது.
இந்த சூழலில், உதயாவும் சற்று கண் அசைய, பிணத்தை யாரோ எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். பிணத்தை காணவில்லை என்று அறிந்த குடும்பத்தினர் உதயாவை அடிக்கின்றனர். பிணத்தைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டரான ஆதேஷ் பாலா வருகிறார்.
இறுதியில் காணாமல் போன பிணம் கிடைத்ததா? இல்லையா? பிணத்தை எடுத்தது யார்? உதய தீப், கவிதா இருவர் திருமணம் நடந்ததா? இல்லையா ? என்பதே ’சாவீ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் உதய தீப், இதுவரை சிறுசிறு வேடங்களில் நடித்தவர் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா விராரணைக்கு நடுவில் அவர் செய்யும் காமெடிகள் சிரிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் கவிதா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். யாசர், மாஸ்டர் விஜய், பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. பூபதி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவு கதைக்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.
காணாமல் போன பிணத்தை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டனி அஜித் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் கலகலப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார். போதை பழக்கத்தால் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’சாவீ’ – சாவு வீட்டில் நடக்கும் நகைச்சுவை
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : உதய தீப், ஆதேஷ் பாலா, யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி
இசை : சரண் ராகவன், விஜே ரகுராம்
ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாச்சலம்
இயக்கம் : ஆண்டனி அஜித்
மக்கள் தொடர்பு : மணி மதன்