ஸ்ரீ விஸ்வா ட்ரீம் வேர்ல்ட் – ஸ்ரீ பட்டவன் தயாரிப்பில் இயக்குநர் செல்லகுட்டி இயக்கத்தில் சாக்ஷி அகர்வால், விஜய் விஸ்வா, அம்பிகா,, இயக்குநர் செல்லகுட்டி, யோகி பாபு, ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சாரா’.
சென்னையில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சாக்ஷி அகர்வால் அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். இன்னும் சில தினங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் மணலில் கலப்படம் என்று கூறி, மிரட்டல் செல்வாவுடன் சாக்ஷிக்கு. பிரச்சனை ஏற்படுகிறது அதுமட்டுமல்லாமல், சாக்ஷியை கொலை செய்ய மிரட்டல் செல்வா திட்டமிடுகிறார்.
அதற்காக, அதே நிறுவன பில்டிங்கில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் ரோபோ சங்கரிடம் சாக்ஷியை கொலை செய்யும் வேலையை மிரட்டல் செல்வா கொடுக்கிறார். இதே சமயம் ரோபோ சங்கரை அடித்துவிட்டு அங்கு கூலியாக வேலை பார்க்கும் செல்லக்குட்டி சாக்ஷி அகர்வாலை கடத்தி விடுகிறார்.
இறுதியில் செல்லக்குட்டி சாக்ஷி அகர்வாலை கடத்தியதற்கான காரணம் என்ன? செல்லக்குட்டியிடம் இருந்து நாயகி ஷாக்ஷியை விஜய் விஷவா காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே ’சாரா’ படத்தின் மீதிக்கதை.
சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சாக்ஷி அகர்வால் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நடிப்பை விட கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.
சாக்ஷி அகர்வாலின் காதலராக நடித்திருக்கும் விஜய் விஸ்வாக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. சைக்கோ கோமாளியாக நடித்திருக்கும் இயக்குநர் செல்லக்குடட்டி நாயகன்,வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இவரது நடிப்பை பார்க்கும் போது நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீவாசனை நினைவுபடுத்துகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. ரோபோ சங்கர், தங்கதுரை, அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா என படத்தில் மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றவாறு இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஜெ.லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பாலாக உள்ளது.
அம்மா பாசம் மற்றும் நட்பு இரண்டையும் மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்லகுட்டி நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் அதனை காட்சிப்படுத்தும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்
மொத்தத்தில் ’சாரா’ – சுமார் ரகம்.
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : சாக்ஷி அகர்வால், செல்லகுட்டி, யோகி பாபு, ரோபோ சங்கர், விஜய் விஸ்வா, தங்கதுரை
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : ஜெ.லக்ஷ்மண் குமார்
இயக்கம் : செல்லகுட்டி
மக்கள் தொடர்பு : ராஜா