செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் – எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சிறை’ .
வேலூர் மத்திய சிறையில் ஐந்து வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்ஷய் குமாரை, கொலை வழக்கு விசாரணைக்காக சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தலைமைக் காவலர் விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு கொடுக்கப்படுகிறது.
பேருந்தில் போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள, அந்த கலவரத்தில் கைதி அக்ஷய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் காணாமல் போகிறார்.
இறுதியில் காணாமல் போன அக்ஷய் குமாரை விகாரம் பிரபு கண்டுபிடித்தாரா? இல்லையா? அக்ஷய் குமார் யாரை கொலை செய்தார் கொலைக்கான காரணம் என்ன? அக்ஷய் குமார் விடுதலை ஆனாரா ? இல்லையா? என்பதே ’சிறை’ .
படத்தின் மீதிக்கதை.
போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் விக்ரம்பிரபு அந்த கதாபத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். இதற்கு முன்பு காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதில் முழுக்க முழுக்க கனிவு கலந்த காக்கி சடடையில் புதிய விக்ரம் பிரவை பார்க்க முடிகிறது.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் எதார்த்த நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளிப் பருவம், இளம் பருவம் மற்றும் சிறைக் கைதி என தனது தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் உரிய மாற்றங்களை கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார் கிராமத்து பெண்ணாக அழகு மற்றும் நடிப்பு, திறமை என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்த தம்பிராஜாவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். எளிய கதையாக இருந்தாலும் அதை அழகாக கையாண்டுயிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. பொதுவாக ஒரு படம் தொடங்கி கதை வளர்ந்து நகர்ந்து விரிந்து ஒரு கட்டத்தில் தான் விறுவிறுப்பு உச்சத்துக்குச் செல்லும். ஆனால், இப்படம் தொடங்கியதில் இருந்து விறுவிறுப்புணர்வுடன் கதை நகர்கிறது
மொத்தத்தில் ’சிறை’ – மனிதாபிமானம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜா
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
இயக்கம் : சுரேஷ் ராஜகுமாரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
