நிஜம் சினிமா – ஹரிஷ் ஓரி தயாரிப்பில் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி அர்த்தனாரி, அபிராமி போஸ், விஜயகுமார், ரெஜின், மெலடி டார்கஸ், சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வெள்ளகுதிர’ .
நாயகன் ஹரிஷ் ஓரி ஒரு பிரச்சனை காரணமாக நகரத்திலிருந்து தன் பூர்வீக மலைகிராமத்துக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார் நாயகன் ஹரிஷ் ஓரி
இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ் முயற்சிக்கிறார் .
இறுதியில் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ் முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா? என்பதே ’வெள்ளகுதிர’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி மலைகிராம மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் . எதிர்மறை சிந்தனையை உள்ளே வைத்துக் கொண்டு அவர் செய்யும் செயல்களால் படத்தின் கதை நகர்வு விறுவிறுப்பாக்குகிறது.
ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் உதிரி விஜயகுமார், அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். ரெஜின் ரோஸ், ஜெயலட்சுமி, என்.எஸ்.டி.அறிவு ஆகியோர் கதாபத்திரங்கள் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளது.
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ராம் தேவ் ஒளிப்பதிவு மலை கிராமத்தை அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலை கிராம மக்கள் வாழ்க்கையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் இத்திரைப்டத்தில் மலைப்பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் படும் கஷ்டத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’வெள்ளகுதிர’ – போராட்ட வாழ்க்கை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ்
இசை : பரத் ஆசிகவன்
இயக்கம் : சரண்ராஜ் செந்தில்குமார்
மக்கள் தொடர்பு : சாவித்ரி