இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ், மோகனா மஞ்சுளா எஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரவீன் கே மணி இயக்கத்தில் சரவணா விக்ரம், அஸ்லி அமான், பாலச்சந்திரன், சாய் தினேஷ், பத்ரம் யுவராஜ், சுப்ரமணியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டியர் ரதி’ .
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயத்தோடு இருக்கிறார். இதனாலேயே இவரது காதல் கைகூடாமல் போகிறது. இந்நிலையில் பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவருடன் வேலை பார்க்கும் நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார்.
அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வர .அதனால், அவருடன் பேசி பழக ஆசைப்படுபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார்.
மறுநாள் சரவணா விக்ரம், அஸ்லி அமான் இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். இதே வேளையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 3 பேர் கொண்ட குழு நாயகி அஸ்லி அமானை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இறுதியில் சரவணா விக்ரம், அஸ்லி அமான் இருவரும் ஒருநாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்களா? இல்லையா? நாயகி அஸ்லி அமான் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பேர் கொண்ட கும்பலிடம் மாட்டிக் கொண்டாரா? இல்லையா? என்பதே ‘டியர் ரதி’ படத்தின் மீதிக்கதை.
தொலைக்காட்சி தொடரில் நடித்து அனுபவம் கொண்ட நாயகன் சரவண விக்ரம் கதைநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். பெண்களுடன் பேச கூச்சப்படும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தில் சிறப்பாக நடிக்க வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்த தவறிவிட்டார்.
ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஹஸ்லி அமான் அழகாக இருப்பதோடு அளவான நடிப்பபை கொடுத்திருக்கிறார். யாரும் செய்ய தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன், காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
பாலியல் தொழிலாளியுடன் நாயகன் ஒருநாள் பயணத்தில் சந்திக்கும் சம்பவங்களை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே மணி இத்திரைப்படத்தில் காதல்,காமம் , முத்தம் இவைகளை பற்றி பேசியிருக்கும் இயக்குனர் இத்திரைக்கதையை சரியான விதத்தில் கொண்டு செல்ல தவறவிட்டுவிட்டார்.
மொத்தத்தில் ‘டியர் ரதி’ – வீண் செலவு
மதிப்பீடு : 2 / 5
நடிகர்கள் : சரவணா விக்ரம், அஸ்லி அமான், பாலச்சந்திரன், சாய் தினேஷ், பத்ரம் யுவராஜ், சுப்ரமணியன்,
இசை : எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட்
இயக்கம்: பிரவீன் கே மணி
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்
