இந்தியன் சினிவே நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் தயாரிப்பில் மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு இயக்கத்தில் : சத்யதேவி, கருணாஸ், மகேந்திரன், திருமுருகன், ஜானகி, நாகராஜ், பிரியலயா, ஆனந்த் செளந்தரராஜன், மோகன், சந்தோஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் ’சல்லியர்கள்’ இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக தமிழகமெங்கும் வெளியிடுகிறார்,
கரிகாலன் தலைமையில் இயங்கும் மக்கள் ராணுவ படை, அரசாங்க ராணுவத்திற்கு எதிராக போராடுகிறார்கள். சிங்கள பிரதேசம் மற்றும் தமிழ் பிரதேசம் ஆகிய எல்லை பகுதியில் ராணுவத்தினருக்கும், மக்கள் ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிடும் மக்கள் ராணுவ அமைப்பினர் காயமடைந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி காயமுற்று உயிருக்கு போராடும் வீரர்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் பணியை ஓய்வின்றி செய்து கொண்டிருக்கிறார்..அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.
இந்நிலையில், மக்கள் ராணுவ அமைப்புகளின் மருத்துவ குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று சிங்கள ராணுவமும், விமான படையும் ஒரே தருணத்தில் இருமுனை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறது. இதே சமயம் சிங்கள ராணுவ வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பதுங்கு குழி மருத்துவமனைக்கு வர அவர் உயிரை காப்பாற்ற பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி போராடுகிறார்.
இதே வேளையில் சிங்கள ராணுவமும், விமான படையும் அதிகாலை நேரம் பதுங்கு குழி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.இறுதியில் சிங்கள ராணுவ தாக்குதலில் வெற்றியடைந்ததா? இல்லையா ? தாக்குதலில் இருந்து சிங்கள ராணுவ வீரர் உயிரை நாயகி சத்யதேவி காப்பாற்றானாரா? இல்லையா? என்பதே ’சல்லியர்கள்’ படத்தின் மீதிக்கதை.
பெண் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சத்யதேவி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எதிரியாகவே இருந்தாலும் உயிரை காப்பாற்றுவதே முதல் கடமையாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கட்டும் நடை,உடை,வீரம் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சிங்கள ராணுவ வீரருக்கு இரத்தம் கொடுப்பதும் அவர் உயிரை காப்பாற்ற தூக்கி கொண்டு ஓடுவது என நிஜ மருத்துவரை நினைவுபடுத்துகிறார்.
நாயகியின் தந்தையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் மனதில் நிற்கிறார். போராளி காதல் ஜோடியாக நடித்திருக்கும் நாகராஜ் – பிரியலயா சரியான தேர்வாக இருக்கிறார்கள். சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், வைரமுத்து மற்றும் டி.கிட்டு ஆகியோரது வரிகளில் பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
போர்க்களத்தில் உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு இத்திரைப்படத்தில் போர்க்களத்தில் இயங்கும் பதுங்கு குழி வைத்தியசாலை பற்றி யாரும் சொல்லாத ஒன்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’சல்லியர்கள்’ – கருணை
மதிப்பீடு : 4.30/5
நடிகர்கள் : சத்யதேவி, கருணாஸ், மகேந்திரன், திருமுருகன், ஜானகி, நாகராஜ், பிரியலயா, ஆனந்த் செளந்தரராஜன், மோகன், சந்தோஷ்
இசை : கென் & ஈஸ்வர்
இயக்கம் : டி.கிட்டு
மக்கள் தொடர்பு : ஆ.ஜான்
