சத்ய ஜோதி பிலிம்ஸ் – டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மார்க்’ .
கொல்ஹாபூரில் கொடூரமான ரௌடி சாம்ராஜ்யத்தை நவீன் சந்திரா நடத்தி வருகிறார் .இவரின் தம்பியான விக்ராந்த் தனது காதலியுடன் திருமண நாள் அன்று ஊரை விட்டு ஓடி விடுகிறார். இதனால் கோபம் கொண்ட நவீன், தனது தம்பி விக்ராந்தை கொல்ல வேண்டும் என்று தேடி வருகிறார்.
மறுபுறம் மாநில முதல்-அமைச்சர் உடல்நிலைக்கு குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார். அவரது மகன் சைன் டாம் சாக்கோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையை டாக்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார்.
இந்த தகவல் இடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி கிச்சா சுதீபிற்கு தெரிய வர தனது குழுவுடன் சேர்ந்து ஆதாரத்தை தீவிரமாக தேடி வருகிறார். இதே சமயம் அந்த செல்போனுடன் டாக்டர் மகன் கடத்தப்பட்டிருப்பதும், அவரை போலவே 18 சிறுவர்-சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் நாயகன் கிச்சா சுதீப் கடத்தப்பட்ட 18 குழந்தைகளை காப்பாற்றினாரா? இல்லையா? குழந்தையை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்தாரா ? சைன் டாம் சாக்கோ முதல்வராவதை தடுத்தாரா? இல்லையா? என்பதே ’மார்க்’ படத்தின் மீதிக்கதை.
இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பியாக நடித்திருக்கும் கிச்சா சுதீப் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடி நாயகனாக வலம் வருகிறார். குழந்தைகளை காப்பாற்ற காட்டும் தீவிரம், அம்மா பாசம், நடனம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளை காப்பாற்றும் இறுதி காட்சியில் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக நவீன் சந்திரா, படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சத்தம் போட்டு கொண்டே இருக்கிறார். தம்பிக்காக யாரையும் கொலை செய்யக்கூட தயங்காத கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். நவீன் சந்திராவின் தம்பியாக நடித்திருக்கும் விக்ராந்த் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் முதல்வராக ஆசைப்படும் சைன் டாம் சாக்கோ , குரு சோமசுந்தரம், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். யோகி பாபு வரும் இடங்களில் காமெடி எடுபடவில்லை.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.சேகர் சந்துரு ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கிறது.
முதல்வர் பதவி , குழந்தைகள் கடத்தல், செல்போன் ஆதாரம், இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் எஸ்.பி ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு முழுநீள ஆக்ஷன் திரைப்படத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாதவாறு கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’மார்க்’ – அதிரடி மாஸ்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி
இசை : பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு : சேகர் சந்துரு
இயக்கம் : விஜய் கார்த்திகேயா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்