பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரீத்தி குமார், ஜரினா வஹாப், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தி ராஜா சாப்’ .
சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்த நாயகன் பிரமாஸ் தனது பாட்டி ஜரினா வஹாப் அரவணைப்பில் வளர்க்கிறார். பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவர் சஞ்சய் தத்தின் ஞாபகத்தில் பாட்டி ஜரினா வஹாப் இருக்கிறார்.
எப்போதும் கணவர் சஞ்சய் தத் குறித்தே பாட்டி யோசிப்பதால் அவருக்கு ஞாபக மறதி அடிக்கடி வருகிறது. ஒருநாள் நண்பனின் மொபைல் போனில் இருந்த புகைப்படத்தை பார்த்த போது அதில் தாத்தா சஞ்சய் தத் உருவம் இருந்ததை பார்க்கும் பிரபாஸ் அவரை தேடி செல்கிறார்.
ஊருக்கு வெளியே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத மாளிகை வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருடைய தாத்தா சஞ்சய் தத் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பிரபாஸ் தெரிந்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் தாத்தா சஞ்சய் தத்துக்கும் பிரபாஸுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் பிரபாஸ் மற்றும் சஞ்சய் தத் இருவரின் மோதலில் வெற்றிப் பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸ் துடிப்பு மிக்க இளைஞராக துறுதுறுவென இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ் , காமெடி ,செண்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் நிதி அகர்வால், ரித்தி குமார், மாளவிகா மோகனன் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பபை விட கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.
தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத் வில்லன் கதாபத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சஞ்சய் தத் மனைவி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜரினா வஹாப் கதைக்கு ஏற்ற சரியாக தேர்வாக இருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் வரும் விடிவி கணேஷ் ,சமுத்திரக்கனி என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எஸ் தமனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
தாத்தா – பேரன் இருவருக்கிடையே நடக்கும் மோதலை மைய கருவாக வைத்து அதில் காமெடி மற்றும் ஹாரர் கலந்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மாருதி இத்திரைப்படத்தில் முதல்பாதியில் பாட்டி,,பேரன் பாசம், ரொமான்ஸ் என செல்ல இரண்டாம் பாதி பேய் வீடு , தாத்தாவுடன் மோதல், காமெடி என்று கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’தி ராஜா சாப்’ – ஹாரர் ,காமெடி
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார்
இசை: தமன்
இயக்கம்: மாருதி
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)