கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி, அபிராமி வெங்கடாச்சலம்,, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் பேலியாகி இருக்கும் ’அனந்தா’ ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் இருந்து அதன் நிர்வாகி நிழல்கள் ரவி உலகில் பல்வேறு பகுதியில் வாழும் மக்களில் இருந்து 5 பேரை மட்டும் தேர்வு செய்து உங்களை புட்டபர்த்திக்கு வருமாறு பாபா அழைப்பு விடுகிறார் என்று கூறுகிறார்.
புட்டபர்த்திக்கு வரும் தொழிலதிபரான ஜெகபதி பாபு தான் பயணித்த விமானம் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டத்தையும் வங்கியில் பணத்தை கொள்ளையடிக்க நினைத்த கொள்ளையர்களை மனதை மாற்றிய பாபாவின் மகிமையை கூறுகிறார்.
பாலக்காட்டில் வசிக்கும் ஒய் ஜி மகேந்திரன் மனைவி திடீரென இறந்துவிடுகிறார். இதனால் கடவுள் மீது கோபம் கொள்ள பிறகு மனைவி மறைவுக்கு உண்மையான காரணத்தை அறிந்து கொள்கிறார்.அதன்பின் பாபாவிடம் சரண் அடைந்ததை சொல்லுகிறார்.
சென்னையில் வசிக்கும் பரதநாட்டியக் கலைஞரான அபிராமி வெங்கடாச்சலம் பிரபல பரதநாட்டிய போட்டியில் கலந்து செல்லும் வழியில் காலில் அடிபட்டு ஆட முடியாத நிலை ஏற்படுகிறது. அவரது அப்பா தலைவாசல் விஜய் கடவுளை திட்டுகிறார். சாய்பாபா தனது சக்தியை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறார்.
சுஹாசினி தனது ஒரே மகன் காசி கங்கை நிதியில் முழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று கூற இதனையடுத்து பாபாவிடம் சுஹாசினி சரணடைகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் வீடு காட்டு தீயால் பாதிக்கப்படுகிறது. இந்த ஆபத்தில் இருந்து பாபா தன் பக்தர்களை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதே ’அனந்தா’ படத்தின் மீதிக்கதை.
ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி, அபிராமி வெங்கடாச்சலம்,, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சஞ்சய் ஒளிப்பதிவு கதைக்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களின் வாழ்க்கை நடந்த அனுபவங்களை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இத்திரைப்படத்தில் சாய்ப்பாவின் தீவிர பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் பாபா நிகழ்த்திய அற்புதங்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார்
மொத்தத்தில் ’அனந்தா’ – அற்புத மகிமை
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி, அபிராமி வெங்கடாச்சலம்,, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய்
இசை : தேவா
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது & பராஸ் ரியாஸ்