மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய …
[7:09 PM, 2/14/2026] Dharani Kumar: (1/2)
திரு. செல்வ பெருந்தகை பேசுகையில், ” இந்தத் திரைப்படம் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக மாற வேண்டும். இந்த காலகட்டத்திற்கு எது தேவையோ அதை தோழர் முத்தரசன் அவர்கள் முன்னெடுத்திருக்கிறார். நேற்று நான் ஒரு வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போது இந்தியாவில் 53.8 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி பற்றாக்குறை இருக்கிறது. கடந்த 2023 -24 ஆண்டு ஒப்பிடும் போது ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மை திட்டங்கள் இந்தியாவில் சரியாக செயல்படவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் சீற்றம் ( பருவமழை மாறி பொழிவது – வறட்சி ஏற்படுவது- தட்பவெப்ப நிலை மாறுவது- மண்ணின் தரம் – வளம் ஒவ்வொரு முறையும் மாறுவது.. ) இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து கொண்டே இருக்கிறது.
வேளாண்மை துறை இந்தியாவில் தினம் தினம் அழிந்து வருவதற்கு காரணம் ஒரு நேர்மையற…
[7:09 PM, 2/14/2026] Dharani Kumar: (1/3)
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
” நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன். இது எனக்கு ஸ்பெஷலான மேடை. படைப்பாளிகளை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த படைப்பை வழங்குபவர்கள் ஒருவகை. இந்த சமூகத்திற்கு தேவையான படைப்பை கொடுப்பவர்கள் மற்றொரு வகை. இது சமூகத்திற்கு தேவையான படைப்பு.
இப்போது இருக்கும் சூழலில் மருத்துவம் போல் படைப்புகள் எப்பவாவது வரும். இதனை அப்படிப்பட்டதொரு படைப்பாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் விஜயகுமாருக்கு மனமார்ந்த நன்றி.
பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு போன் கால் வந்தது. முத்தரசன் என்ற பெயரை சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாருங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம் என்று கூறினேன். இது சிவப்பு வண்ண துண்டிற்கு நான் கொடுக்கும் மரியாதை. இந்த சிவப்புத் துண்டில் அனைத்தும் அடங்கும் பேரன்பு இருக்கும். பெரும் கருணை இருக்கும் பெரும் கோபம் இருக்கும் மக்களுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் இப்படித்தான் நான் சிவப்பு வண்ணத்தை பார்க்கிறேன்.
அவருடன் நிற்கும்போது அவருடன் பணியாற்றும் போது.. இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா..! என்ற ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தார். அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.
அவருக்குத் துணையாக ஒரு பெண்மணி நடித்தார். அவரது பெயர் ரஷ்யா என்றார்கள். அதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அவரிடம் கேட்டபோது எங்கள் ஊரில் நிறைய பேருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் ரஷ்யா இருக்கும் என்றார்.
இப்படி இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய படைப்பு தான் இது.
இனி வரும் காலங்களில் உணவுக்காக தான் சண்டை. காசு பணத்திற்காக அல்ல. நல்ல உணவை வைத்திருப்பவன் பெரும் செல்வந்தனாக இருப்பான். பணக்காரன் வேறு. செல்வந்தன் வேறு.
நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல உணவு வைத்திருப்பவன் தான் செல்வந்தன். இதை நோக்கித்தான் இந்த சமூகம் ஓடும் அவரிடம் சென்று தான் கைகட்டி நிற்க வேண்டும். அந்த சூழல்தான் வரப்போகிறது. இதற்கு முந்தைய தலைமுறை பாதுகாத்துக் கொடுத்த இயற்கை வளங்களை நாம் பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அந்த பொறுப்பு நமக்கு நிறைய இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அரிசி . இது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும். காலம் காலமாக பேசப்படும். இதை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து நல்ல ஒரு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்றால் இதுபோன்ற நல்லதொரு படைப்பு உங்களை தேடி வரும். வெல்வோம். ” என்றார்.
இயக்குநர் விஜயகுமார் பேசுகையில்,
” இந்தப் படம் நீண்ட கால ப்ராஜெக்ட். இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் – பிரபாகரன் – மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி. இந்த விழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.
இதில் நடித்த இரா முத்தரசன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.
இந்த திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் நெய் குப்பை எனும் கிராமத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவத்தால் தான் இந்தப் படம் உருவானது ”என்றார்.
தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில்,
” இந்த படத்தின் கதையை இயக்குநர் விஜயகுமார் என்னிடம் சொல்லி முதலில் ஒரு மேக்கிங் வீடியோ செய்ய வேண்டும் என்று தான் சொன்னார். அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டேன் ஒரு தொகையை சொன்னார் அதை கொடுத்தேன். அதன் பிறகு முத்தரசன் அவர்களை சந்தித்து அவருடைய ஒப்புதலுடன் மேக்கிங் வீடியோவை உருவாக்கினோம். இதைப் பார்த்த பிறகு இதை இன்னும் விரிவுபடுத்தலாம் விரிவு படுத்தலாம் என்று சொல்லி சொல்லி பேசி பேசி இவ்வளவு பெரிய படமாக உருவாகி இருக்கிறது. இது இவ்வளவு பெரிய படமாக வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
திரு. இரா. முத்தரசன் பேசுகையில்,
” இயக்குனர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னை சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம் அதில் நீங்கள் இரண்டு நாட்கள் வந்து வருகை தந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அதன் பிறகு கதையை சொன்னார். கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று சொன்னேன்.
இயக்குனர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர். சாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.
அதன் பிறகு இது குறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன். ஆவணப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம். அதை விருதிற்காக அனுப்புவார்கள். என்றார்.
அதன் பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றி சொன்ன போது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார்.
அதன் பிறகு இரண்டு நாள் என்பதை மூன்று நாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்ட படம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.
அதன் பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார்.
அதன் பிறகு 40 நாட்கள் ஆனது. அதன் பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.
இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்று விட்டேனோ.. என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் உண்மையை சொல்கிறேன் இது ஒரு விபத்து போன்றது தான் .என்னுடைய முழு நேரமும் அரசியல் தான். அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அனைவரும் பார்க்க வேண்டும். படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய் குப்பை கிராம மக்களுக்கும் நன்றி” என்றார்.