யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஜய் குமார் ராஜு தயாரிப்பில் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு ,லிவிங்ஸ்டன் , ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கப்புள் ஃபிரண்ட்லி ‘.
திருச்சியில் இருக்கும் நாயகன் சந்தோஷ் ஷோபன் அம்மா,அப்பா, அண்ணன்,அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இன்டீரியர் டிசைனிங் வேலை கிடைக்காததால் சென்னைக்கு வருகிறார்.
அங்கு ஐடி நிறுவனத்திற்கு வேலை தேடி செல்லும் நாயகி மானசாவை சந்தோஷ் சந்திக்க அவருக்காக தங்கும் விடுதி தேடி அலைகிறார். தங்கும் விடுதியில் இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் தான் தங்கியிருக்கும் வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
இன்டீரியர் டிசைனிங் துறையில் முன்னேற நினைக்கும் சந்தோசுக்கு நாயகி மானசா உதவி செய்கிறார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்கிறார்கள். இந்நிலையில் மானசாவின் அப்பா இவர்கள் காதலை ஏற்க மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் மானசாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவ மனையில் இருந்து சந்தோஷ் , மானசாவை கேரளவிற்கு அழைத்துச் செல்கிறார்.
இறுதியில் சந்தோஷ் , மானசாவை கேரளவிற்கு அழைத்துச் செல்ல காரணம் என்ன? இவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா? என்பதே ‘கப்புள் ஃபிரண்ட்லி ‘ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன் தமிழில் அறிமுகம் என்றாலும் தெலுங்கு சினிமாவில் நன்கு அறியப்பட்ட முகம் வேலை தேடி அலைவது , காதலியுடன் ரொமான்ஸ் , குடும்ப பாசம் என அனைத்து உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசி எதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். அழகாக இருப்பதோடு அசத்தலான நடிப்பபை வழங்கியிருக்கிறார். இவரை பார்பபதற்கு நாடோடிகள் படத்தில் வரும் அபிநயாவின் சாயல் தெரிகிறது.
யோகி பாபுவிற்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும், சுனில் ரெட்டியுடன் சேர்ந்து செய்யும் காமெடி ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. படத்தில் வரும் லிவிங்ஸ்டன் , ஸ்ரீ ரஞ்சனி என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம். தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவு பிரமாணமாக இருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் காதலர்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை புரிதலையும் மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். காதலர்களுக்கு அழிவுண்டு அனால் காதலுக்கு அழிவில்லை என்பதை அழகாகவும் தெரிவாகவும் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘கப்புள் ஃபிரண்ட்லி ‘ (Couple Friendly) – மனதில் நிற்கும் காதல்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு ,லிவிங்ஸ்டன் , ஸ்ரீ ரஞ்சனி
இசை : ஆதித்யா ரவீந்திரன்
இயக்கம் : அஷ்வின் சந்திரசேகர்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media )