‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார்கள்.
கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது.
இதனால் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் இப்படம் எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.