ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் சார்ப்பில் : வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரிப்பில் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ பட்டர்ஃப்ளை’.
நிவேதிதா , அதுல் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் கொடைக்கானலில் இருக்கும் நாயகி வீட்டிற்கு செல்கிறார்கள். நாயகி நிவேதா தனது முன்னாள் காதலனை பற்றி கணவருடன் கூற முயற்சி செய்கிறார்.
பல தடவை சொல்ல முயற்சி செய்தும் உண்மையை சொல்ல முடியாமல் போகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனம் பழுது அடைய வழியில் நிற்கும் சிபியை வீட்டிற்கு அழைத்து வரும் அதுல் சிபியை தன் கல்லூரி நண்பர் என அறிமுகப்படுத்துகிறார்.
இந்நிலையில் சிபியை பார்த்த நிவேதா அதிர்ச்சி அடைகிறார். நாயகி நிவேதா சிபியை பார்த்து அதிர்ச்சி அடைய காரணம் என்ன? நிவேதா தன் முன்னாள் காதலன் குறித்த உண்மையை அதுலிடம் கூறினாரா? இல்லையா? என்பதே ’ஓ பட்டர்ஃப்ளை’.
நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பால் கவர்கிறார். முன்னாள் காதல் பற்றி கணவரிடம் கூற முடியாமல் தவிக்கும் தவிப்பப்பை கண்களாலே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தவிப்பு, பதற்றம், ஏக்கம், என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
நாயகி நிவேதா கணவராக நடித்திருக்கும் அதுல் தனது கதாபாத்திரத்தின் தலையை உணர்ந்து உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். வேலையில்லாமல் படும் வேதனையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிவேதாவின் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாட்டம் பூச்சியை தனது குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளும் நாசர், துறவறம் பூண்ட சகோதரியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமெளலி , கீதா கைலாசம் என படத்தில் மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் . பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வேதராமன் சங்கரன், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
கணவன் – மனைவி இருவருக்கிடையே மூன்றாவதாக ஒருவர் வருவதால் ஏற்படும் பிரச்சனையை மைய கருவாக வைத்து திரைக்கதை உருவாகியிருக்கிறார் இயக்குநர் விஜய் ரங்கநாதன் இத்திரைப்படத்தில் ஒருவர் உயிர் போவதும் உயிர் பிழைப்பதும் காலத்தின் பிடியில்தான் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் ’ஓ பட்டர்ஃப்ளை’ – பறப்பதற்கு தடையில்லை
மதிப்பீடு : 2/5
நடிகர்கள் : நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம்
இசை : வைசாக் சோமநாத்
இயக்கம் : விஜய் ரங்கநாதன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்