ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் இயக்குநர் ஆர்.ஏ.கார்த்திக், இயக்கத்தில் பிரியங்கா மோகன், பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ரிஷிகாந்த், ஜாங் ஜெயோன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மேட் இன் கொரியா’ .
மலை கிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகன் அம்மா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுவயதில் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கொரியா சென்று அரசி என்ற நாடகத்தில் நடித்த நிலையில் கொரியா மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. எப்படியாவது கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் பிரியங்காவின் அப்பா தான் நடத்தி வரும் உணவகத்தை மகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கிடையில் தன்னுடன் படித்த மாணவனை பிரியங்கா காதலிக்கிறார். இவர்கள் காதல் விவகாரம் இவரது அப்பாவிற்கு தெரிய வர வேறொருவருக்கு பிரியங்காவை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.
காதலனுடன் ஊரை விட்டு செல்லும் பிரியங்கா காதலனால் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையால் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொழி தெரியாத ஊரில் அறிமுகமாகும் பார்க் ஹை- ஜின் மூலம் ஒரு பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலையில் சேரும் பிரியங்கா பாட்டியின் உதவியோடு ஒரு உணவகத்தை நடத்துகிறார்.
இந்நிலையில் நிலச்சரிவில் பிரியங்காவின் பெற்றோர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். பெற்றோர்களை பார்ப்பதற்காக தமிழகம் வருகிறார். இதே சமயம் பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.
இறுதியில் பிரியங்கா பெற்றோர்களை பார்த்தாரா? இல்லையா? பாட்டி மருத்துவ மனையில் இருந்து உடல் நலம் பெற்று வந்தாரா? இல்லையா ? கொரியாவில் பிரியங்கா உணவகத்தை மீண்டும் தொடங்கினாரா? இல்லையா ? என்பதே ’மேட் இன் கொரியா’ படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், அளவான நடிப்பின் மூலம் முழுப்படத்தையும் தன தோல் மீது சுமந்து நிற்கிறார். காதல், பாசம், நட்பு , சோகம் என அனைத்தையும் உணர்வு பூர்வமான நடிப்பால் அழகாக வெளிப்படுத்துகிறார்.
பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த், கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரியங்காவின் பெற்றோராக நடித்திருக்கும் நடிகர்கள், பார்க் ஹே-ஜின் நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் ஆகிய கோரிய நடிகர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை கதையோடு பயணிக்கு வகையில் உளள்து. பிரசன்னா குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தமிழ் பெண் கொரியா செல்ல வேண்டும் என்ற ஆசையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ஏ.கார்த்திக், இத்திரைப்படத்தில் புதிய உறவு, நட்பு , பாசம் ஆகியவற்றின் மூலம் மாற்றங்களை அழகாவும் அழுத்த்மாவும் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் ’மேட் இன் கொரியா’ – அழகிய பயணம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : பிரியங்கா மோகன், பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ரிஷிகாந்த், ஜாங் ஜெயோன்
இசை : ஹேஷாம் அப்துல் வஹாப்
இயக்கம் : ஆர்.ஏ.கார்த்திக்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D’one)