பர்வதா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி ராம், சுலோச்சனா குமார் தயாரிப்பில் இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் ,பிரியதர்ஷினி யாதவ், தேவதர்ஷினி, நளினி,சுராஜ் வெஞ்சர மூடு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘யூத்’ .
சென்னையில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வரும் சுராஜ் , மனைவி தேவதர்ஷினி மகன் கென்னுடன் வசித்து வருகிறார். 10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் ஒன்றுதான் வாழ்க்கை என்று இருக்கிறார்.
இந்நிலையில் பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியை கென் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். சில நாட்கள் கடந்த நிலையில் மீனாட்சி பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என ஊருக்கு செல்கிறார்.
இதே சமயம் முகநூல் மூலம் அறிமுகமாகும் பிரியதர்ஷினி நெருங்கி பழ இதை நேரில் பார்க்கும் மீனாட்சி கென்னை கன்னத்தில் அறைவதுடன் காதலை முறித்துக் கொள்வதாக கூறுகிறார். பிரியதர்ஷினியுடனான காதலும் பொய் என கென்னுக்கு தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்க்கும் கென்னின் அப்பா சுராஜ் அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் கென் பள்ளிப்படிப்பை தொடர்ந்தாரா? இல்லையா? கென் குடும்பத்திற்காக காதலை தூக்கி எறிந்தாரா ? இல்லையா? என்பதே ‘யூத்’ படத்தின் மீதிக்கதை.
பள்ளி மாணவனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், துறுதுறுவென நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், காமெடி , ஆட்டம், பாட்டம், சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் காதலா , குடும்பமா எது முக்கியம் என்று எடுக்கும் முடிவு படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துடுகிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு எதிர்த்த நடிப்பால் நிஜ அப்பவாவே வாழ்ந்திருக்கிறார். இரவு மூன்று மணிக்கு மேல் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இயல்பான நடிப்பால் கவர்கிறார். படத்தின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல துணை நிக்கிறார். பள்ளி முதல்வராக நடித்திருக்கும் நளினி , நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைத்து நண்பர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. விக்கி ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.
காதல் , கல்வி, குடும்பம் ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு இளமையான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ் இத்திரைப்படத்தில் காதலை விட கல்வியும், குடும்பமும் முக்கியம் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். முத்தக் காட்சிகளோ , ஆபாச வார்த்தைகளோ , இரட்டை அர்த்த வசனமோ இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் விதத்தில் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘யூத்’ – குடும்பத்தின் மீது வைக்கும் அன்பு
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் ,பிரியதர்ஷினி யாதவ், தேவதர்ஷினி, நளினி,சுராஜ் வெஞ்சர மூடு
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் : கென் கருணாஸ்
மக்கள் தொடர்பு : பரணி