விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ஆகியோர் நடிப்பில் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி வெளியாகிறது.
மலைக்கிராமப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் , சிங்கம்புலி, வடிவேல் முருகன் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த ஊரில் குற்றங்கள் எதுவும் நடக்காததால் அந்த காவல் நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது .
இந்நிலையில் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள பாறை ஒன்றில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை மட்டும் கிடக்கிறது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ள எங்கு தேடியும் விஜய் சேதுபதியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை .
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கும் போலீஸ் மதுரை, கேரளா என பல்வேறு பகுதிகளில் தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறார்கள். இறுதியில் காணாமல் போன விஜய் சேதுபதியின் உடல் போலீசுக்கு கிடைத்ததா? இல்லையா ? உண்மையில் விஜய்சேதுபதி நல்லவரா? கெட்டவரா ? என்பதே ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் யின் மீதிக்கதை.
முத்து கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி யாரும் யூகிக்க முடியாத விதத்தில் இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. நடன கலைக்குழுவின் பெண்கள் மானத்தை காப்பவராகவும் , ஹோட்டலில் வேலை பார்க்கும் வயதான ஊழியரை அதே ஹோட்டலுக்கு முதலாளியாக உட்கார வைக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது.
போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் முத்துக்குமார் உடலை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவொரு முயற்சிகளும் பாராட்டுக்குரிய விதத்தில் இருக்கிறது. குறிப்பாக இவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க முடிகிறது.
போலீசாக நடித்திருக்கும் வடிவேல் முருகன் அம்மா மற்றும் மன மனைவி இருவரிடமும் மாட்டிக் கொள்ளும் இடம் சிரிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. இவரது மனைவியாக நடித்திருக்கும் பார்வதி கிராமத்து பெண்ணாக பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
சிங்கம் புலி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், ரிஷா, அபி நட்சத்திரா என மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக இருக்கிறது. மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தல் பலம் சேர்க்கிறது.
வெட்டப்பட்ட தலையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன் இத்திரைக்கதையை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ – நல்லவனுக்கு நல்லவன்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி
இசை : ராஜேஷ் முருகேசன்
இயக்கம் : மணிகண்டன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்