ஜெகதீசன், ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீ ஃபார் எவர்’.
ஓய்.ஜி. மகேந்திரnவின் மகள் தான் காதலித்தவருடன் வீட்டை வீட்டு ஓடிவிடுகிறார். பல வருடங்கள் கடந்த நிலையில் கையில் ஒரு பெண் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக மீண்டும் அப்பா வீட்டிற்கே வருகிறார். இதன் பிறகு இவர்கள் தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்கள்.
இதையடுத்து சென்னைக்கு வரும் சுதர்சன் கோவிந்த் ஆப் டெவலப்பராக முயற்சிக்கிறார். காதலர்களுக்காக ‘நீ ஃபார் எவர்’ என்ற பெயரில் ஒரு சாட்டிங் ஆப் உருவாக்குகிறார். ஆனால் அந்த ஆப் சரியாக அமையாததால் காதல் பற்றி தெரிந்து வர சொல்லுகிறார்கள்.
மறுபுறம் இயக்குநராக முயற்சிக்கும் நாயகி அர்ச்சனாவிற்கு ஒரு நிறுவனம் காதல் கதை கொண்டு வந்தால் படம் பண்ணலாம் என்று கூறுகிறது. இந்நிலையில் சுதர்சன் , அர்ச்சனா இருவரும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறாகள்.
இதே சமயம் தாத்தா ஓய்.ஜி பேரனுக்காக பெண் ஒன்றை பார்த்து நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் நாயகன் சுதர்சன் தாத்தா பார்த்த பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா? சுதர்சன் , அர்ச்சனா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ‘நீ ஃபார் எவர்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்சன் கோவிந்த் இயல்பான நடிப்பால்
கவர்கிறார். காதல், ஆட்டம், பாடம், செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தியிருக்கிறார்.
கண்டிப்பு மிக்க தாத்தாவாக நடித்திருக்கும் ஓய்.ஜி. மகேந்திரன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். நாயகன் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி இவரது மனைவியாக வரும் நடிகை, பிரது, நோபி ஜேம்ஸ், என மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமநாத் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது பின்னணி இசை படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது. ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக உள்ளது.
காதல் கதையை மைய கருவாக வைத்து ஒரு குடும்ப பின்னணி கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி இத்திரைப்படத்தில் காதலை மட்டும் சொல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி அழகாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘நீ ஃபார் எவர்’ – அழகான உணர்வு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன்
இசை : அஸ்வின் ஹேமநாத்
இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)