ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் தயாரிப்பில் இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜெ.ஆர் , விஜி வெங்கடேஷ், , ரமா, வசுந்தரா, அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அங்கீகாரம் ’.
சென்னையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கே.ஜெ.ஆர் தடகள வீரர், துப்புரவுப் பணியாளராக இருக்கும் தாய் ரமா, வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கையுடன் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.
இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு பயிற்சியாளராக இருக்கும் வசுந்தரா கடுமையாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சமயம் தசை பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனினும் தனது கடுமையான பயிற்சியின் மூலம் முழு உடற் தகுதி பெற்று இருந்தும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது.
இதனையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார். இறுதியில் நாயகன் கே.ஜெ.ராஜேஷுக்கு நீதி கிடைத்ததா ? இல்லையா? காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டாரா ? இல்லையா ? என்பதே ‘அங்கீகாரம் ’ படத்தின் மீதிக்கதை.
தடகள வீரராக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர் அறிமுக நாயகன் போல இல்லாமல் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசம், எமோஷனல் , சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக நியாகம் கேட்டு நீதிமன்றத்தில் வாதாடும் ஒவ்வொரு காட்சிகளும் நிச்சயம் கைத்தட்டல் பெறும். தனி ஒருவராக முழுப்படத்தையும் தாங்கி நிற்கிறார்.
துப்புரவு பணியாளராக வரும் ரமா , இவரது மகளாக வரும் இசபெல்லா , பெண் வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
பயிற்சியாளராக வரும் வசுந்தரா, நீதிபதியாக வரும் ரங்கராஜ் பாண்டே,, மோகன் ராம் , அமைச்சராக வரும் மன்சூர் அலிகான் என அப்படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. விஸ்வநாத் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் தென்பாதியான் இத்திரைப்படத்தில் திறமையும் , கடுமையான உழைப்பும் இருந்து எந்த விதத்தில் எல்லாம் வீரர்கள். நிராககரிக்கப்படுகிறார்கள். இதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் எப்படியெல்லாம் ஆட்டிப்படைகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘அங்கீகாரம் ’ – உண்மையான திறமைக்கு கிடைக்காத ‘அங்கீகாரம் ’
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : கே.ஜெ.ஆர் , விஜி வெங்கடேஷ், , ரமா, வசுந்தரா, அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத்
இசை : ஜிப்ரான்
இயக்கம் : தென்பாதியான்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
