வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – டாக்டர் ஐசரி கே.கணேஷ், விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ .
வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நாயகன் விஷ்ணு விஷால், மனைவி ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பெண் குழந்தை சாராவுடன் கோவையில் வசித்து வருகிறார்.
வீட்டை பராமரிப்பது , மகளை பார்த்துக் கொள்வது மனைவியை மல்யுத்த போட்டியியில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் விஷ்ணு விஷால் செய்து வருகிறார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அமைச்சர் கையால் பதக்கத்தை பெறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி, இதை பார்த்து கோபம் கொள்ளும் பயிற்சியாளர் ஐஸ்வர்யாவை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, பெண் குழந்தை ஒழுங்காக படிக்காததால் கணவன் – மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சியாளர் ஐஸ்வர்யாவிற்கு மன சோர்வு போக சில மருந்துகளை மருத்துவரிடம் வாங்கி கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்க சொல்கிறார்.
இதனையடுத்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யாவிற்கு தினமும் கொடுக்கும் சாப்பாட்டில் அதை கலந்து கொடுக்கிறார். இந்நிலையில் தேசிய அளவிலான தகுதி போட்டியில் கலந்து கொள்ளவும் ஐஸ்வர்யா அதில் தோல்வி அடைகிறார். அது மட்டும் இல்லாமல் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக கூறி ஒரு வருடத்திற்கு எந்த மல்யுத்த போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது என்ற உத்தரவு போடப்படுகிறது.
இதனையடுத்து விஷ்ணு விஷாலை பிரியும் ஐஸ்வர்யா குழந்தை தன்னுடன் அழைத்துச் செல்வதோடு விவாகரத்துக் கேட்டு நீதி மன்றம் செல்கிறார். இறுதியில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் மல்யுத்த போட்டியில் கலந்துக்க கொண்டாரா ? இல்லையா? என்பதே ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் தான் ஒரு முன்னணி நடிகர் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் கதைநாயகனாக கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மக்கள் மீது காட்டும் பாசம், மனைவி மீது காட்டும் அக்கறை , சண்டை ,காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். “அப்படி போடு..போடு” பாடலுக்கு டீச்சருடன் போடும் ஆட்டம் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. இப்படி ஒரு கணவரை திருமணம் செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஏங்குவார்கள்
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பெண் குழந்தைக்கு அம்மாவாகவும், மல்யுத்த வீராங்கனையாகவும் , டீச்சருடன் கணவன் காட்டும் நெருக்கத்தை பார்த்து கோபம் கொள்ளும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா அப்பாவிடம் காட்டும் பாசம், அமம்விதம் காட்டும் கோபம் , ஆட்டம் , பாட்டு என அனைத்ததிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோக்ஷா, அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். முனிஷ்காந்த், காளிவெங்கட், கருணாகரன், கருணாஸ் , லிசி ஆண்டனி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு இருவரின் கதாபத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டானின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது . கே.எம்.பாஸ்கார் ஒளிப்பதிவு அழகாகவும் சிறப்பாக இருக்கிறது.
கணவன் – மனைவி இருவருக்கிடையே மூன்றாவது நபர் வந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு இத்திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவை கலந்து குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள் . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், அதை விட கூடுதல் காமெடி காட்சிகளுடனும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் விஷயங்களையம் அழகாக கையாண்டுயிருக்கிறார்.
மொத்தத்தில் ‘கட்டா குஸ்தி 2’ – குடும்பங்கள் கொண்டாடும்
மதிப்பீடு : 4.5/5
நடிகர்கள் : விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ், காளி வெங்கட்,
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவு : கே.எம்.பாஸ்கரன்
இயக்கம் : செல்லா அய்யாவு
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
