நடிகர் முத்துக்காளை ஏற்கனவே தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மூன்று டிகிரி ( B A.,M.A.,B.Lit., ) பெற்றிருந்தார். அதற்கு மேல் படிக்க ஆசைப்பட்ட முத்துக்காளைக்கு ஒரு தடை இருந்தது . அவர் ஏற்கனவே எட்டாம் வகுப்பு வரை தான் படித்து இருந்தார். அப்போது என்ன படித்து இருந்தாலும் Entrance exam எழுதி பட்டபடிப்பு படிக்கலாம் .
அப்படித்தான் அவர் மூன்று டிகிரியும் படித்தார். அதன் பிறகு ருல்ஸ் மாறி விட்டது . ரெகுலார் வகுப்பு படித்தால் மட்டுமே மேற்கொண்டு படிக்க முடியும் என்ற தடை இருந்ததால், கடந்த மூன்று வருடங்களாக 10,11, மற்றும் நேற்று வெளியான 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க இருந்த தடையை உடைத்த முத்துக்காளை திங்கள் கிழமை முதல் அடுத்த டிகிரி நோக்கி பயணம் செய்ய இருப்பதாக இந்த சோகமான தருணத்தில் ( மனைவியை இழந்த ) பகிர்ந்து கொண்டார் நடிகர் முத்துக்காளை.

