தயாரிப்பாளர் திருமலை சிவம் தயாரிப்பில், இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ள “ஆகான்யா” திரைப்படம் விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், பிரபல IT நிறுவனங்கள் மற்றும் நவீன மால்களில் படமாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப தரம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் கதாநாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். சுப்ரா அய்யப்பா அதிரடி நாயகியாக சண்டைக் காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே புத்திசாலித்தனமும் சாதுர்யமும் மிக்க கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
“ஆகான்யா” திரைப்படத்தில் இடம்பெறும் இரண்டு குத்துப்பாடல்களில் ஒன்றில் ஸ்ருஷ்டி டாங்கே தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், படத்தின் இனிமையான காதல் பாடலை கவிஞர் பா. விஜய் எழுதியுள்ளார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “ஆகான்யா”, ஆக்சன், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
- தயாரிப்பு: திருமலை சிவம்
- இயக்கம்: ஜவஹர் பரமசிவம்
- ஒளிப்பதிவு: கதிரவன்
- இசை: சுபாஷ் சந்திரன் (USA)
- படத்தொகுப்பு: விக்னேஷ் குமார் PG

