ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ் மற்றும் சத்யராஜ் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம்,ராமநாதபுரத்து மீனவர்களின் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவான ஒரு மிகச்சிறந்த கமெர்சியல் எண்டர்டெயினர் ஆகும்.
ராமநாதபுரம் முகவைப்பட்டினம் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டி மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாக நடக்கிறது. ஊர் படகுப் போட்டியில் புறக்கணிக்கப்படும் மிதுன், எதிரணிப் பயிற்சியாளரான ஊர்ப் பெரிய புள்ளி ‘சாட்டைப்புலி’ சுஹாஸைக் கொல்ல முயன்று தோற்கிறார். உயிருக்குப் பயந்து சென்னையில் தலைமறைவாக வாழும் சூரி (முத்துக்காளி)யிடம் தஞ்சம் அடைகிறார்.
சூரிக்கும் சுஹாஸிற்கும் இடையே ஏற்கனவே ஒரு கொடூரமான கடந்த காலப் பகை இருக்கிறது. மிதுனுக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பும் சூரி, ஊரே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல், படகின் முதன்மை மாலுமியான ‘மண்டாடி’யாகக் களம் இறங்குகிறார்.
நடுக்கடலில் சீறிப்பாயும் பாய்மரப் படகுகளுக்கு இடையே நடக்கும் ஆபத்தான பந்தயத்திலும், தன் பழைய பகையைத் தீர்க்கும் மரண போராட்டத்திலும் சூரி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான கதை!
காமெடி நடிகராக இருந்த சூரி தங்களின் கடின உடலுழைப்பால் மாஸ் ஆக்ஷன் நாயகனாகத் தன்னை வலுவாக நிலைநிறுத்தியுள்ளார். சுஹாஸின் மிரட்டலான வில்லத்தனமும், சத்யராஜின் அழுத்தமான காட்சியமைப்புகளும், மகிமாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன; அத்துடன், நடுக்கடல் பந்தயங்களை வியக்க வைக்கும் வகையில் படமாக்கிய எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவின் கச்சிதமான எடிட்டிங் மற்றும் ஜி.வி. பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசை ஆகியவை இணைந்து இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் படகுப் போட்டி சண்டைக்காட்சிகளை ஒரு மெய்சிலிர்க்கும் திரையனுபவமாக மாற்றியிருப்பதால், இத்திரைப்படத்தைக் குடும்பத்துடன் திரையரங்கில் சென்று தாராளமாக ரசிக்கலாம்.
மொத்தத்தில் : தரமான விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படம்!
மதிப்பீடு : 4.5/5
முக்கிய நடிகர்கள் : சூரி,சுஹாஸ்,மஹிமா நம்பியார்,சத்யராஜ்,ரவீந்திர விஜய்,கிருத்திகா பாலசுப்பிரமணியன்,மிதுன் ஜெய் சங்கர்
இயக்கம் & கதை: மதிமாறன் புகழேந்தி
தயாரிப்பு: எல்ரெட் குமார்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்
படத்தொகுப்பு: பிரதீப் இ. ராகவ்
சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன்
மக்கள் தொடர்பு : ரேகா
