திரைப்பட்டறை நடிப்புப் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களின் வகுப்பு முழுமை பெறவும், அவர்கள் தயக்கத்தை முழுவதும் உதறி நடிப்பில் லயிக்க உதவுவதற்கும், அம்மாணவர்களை மேடையேற்றி அழகு பார்ப்பது வழக்கம். கடந்த சனி மற்றும் ஞாயிறு “ராணுவ வீரன் ” நாடகம் அரங்கேற்றப்பட்டது. ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தில், நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. “ விஜய் அவர்களின் ‘பிரியமுடன்’, ‘யூத்’ மற்றும்’இரணியன்’ ‘ஜித்தன்’, ‘ஜித்தன் 2’திரைப்பட இயக்குனர் திரு.வின்சென்ட் செல்வா அவர்கள்.
திரைப்பட தயாரிப்பாளர் துரை அவர்கள். திரைப்பட இயக்குனர் மற்றும் “உதவி இயக்குனர் சங்கம் துணைத் தலைவர்”திரு. முகிலன் அவர்கள்.ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, நாடகத்தில் பங்குபெற்ற நடிகர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.


