அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் புது வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள போன் செய்கிறார் அர்ச்சனா. அப்போது, முற்போக்கு சிந்தனையும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட சமூக சேவகியான தாய் அனுமோல், தந்தை குரு சோமசுந்தரத்தைப் பிரிந்து வாழ்கிறார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவருகிறது.
இதனால், தன் காதலன் விஜய் விஷ்வாவுடன் உடனடியாக இந்தியா திரும்புகிறார் அர்ச்சனா.
முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட குரு சோமசுந்தரம் – அனுமோல் தம்பதியினர், ஊரே வியக்கும் வண்ணம் ஒரு சிறந்த தம்பதியாக வாழ்ந்து வந்தவர்கள். இந்நிலையில், பாரிஸில் நடக்கும் மருத்துவ கருத்தரங்கிற்குச் செல்லும் மருத்துவர் குரு சோமசுந்தரம், அங்குள்ள ஒரு கஃபேவில் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும்போது, சென்னையைச் சேர்ந்த ஓர் இளம் காதல் ஜோடியின் படத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
சென்னை திரும்பியதும் தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடியைப் பற்றிய உண்மைகளையும், அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்பதையும் கூறுகிறார். பத்திரிகைச் செய்தி மூலம் விஷயத்தை அறிந்துகொள்ளும் அனுமோல், கணவர் மீது கடும் கோபமடைந்து அவரை விட்டுப் பிரிகிறார்.
பிரிந்த பெற்றோர் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் மகள் அர்ச்சனா. ஆனால், “நான் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும்” என குரு சோமசுந்தரத்திற்குப் பிடிவாதமாக ஒரு நிபந்தனை விதிக்கிறார் அனுமோல்.
அனுமோல் விதித்த அந்த நிபந்தனை என்ன? என்பதே ‘பாரிஸ் கஃபே’ படத்தின் மீதிக்கதை
மொத்தத்தில் :காதலும் சமூகப் பொறுப்பும்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : குரு சோமசுந்தரம் ,அனுமோல் ,விஜய் விஸ்வா ,அர்ச்சனா குமார்,நயனா சாய்,சாய் விக்கி ,பிபின் குமார்
இயக்கம் : சராஜ் சீலன்
இசை: கே. கிருஷ்ண குமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்
