நாயகன் ராகவ், புகைப்படங்களை ஊடுருவிப் பார்த்து அதில் மறைந்துள்ள உண்மைகளையும், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதையும் தன் கூர்மையான அறிவால் துல்லியமாக யூகிக்கும் ஒரு அபூர்வ ஆற்றல் படைத்தவர். இதை நண்பர்கள் ‘கடவுள் தந்த சக்தி’ எனக் கூறினாலும், ராகவ் இது ஒரு ‘அறிவியல் பூர்வமான உண்மை’ என்றே நம்புகிறார்.
பிரபல நடிகை இதி ஆச்சார்யாவின் தீவிர ரசிகரான ராகவ், அவரை நேரில் சந்திக்க முயலும் வேளையில், பாலியல் தொழிலாளியான யாமினி லக்ஷ்மணனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வரும் சூழலில், எதிர்பாராதவிதமாக ஒரு நாள் இரவில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் இருந்து விழுந்து யாமினி உயிரிழக்கிறார்.
இன்ஸ்பெக்டர் நித்திஷின் தீவிர விசாரணையில் இது தற்கொலை அல்ல, கொலைதான் என்பது உறுதியானாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் தாமதம் ஏற்படுகிறது. மற்றொரு புறம், தன் தோழியின் மரணத்திற்குப் பின்னால் உள்ள பின்னணியைக் கண்டுபிடிக்க ராகவ் களமிறங்குகிறார்.
இறுதியில், யாமினி லக்ஷ்மணன் உயிரிழந்ததன் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லராகச் சொல்வதே ‘பீப்’ திரைப்படத்தின் கதை.
மொத்தத்தில் ‘பீப்’ – விறுவிறுப்பான க்ரைம் திரில்லர்!
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: ராகவ், சுனைனா, எல். சண்முக சுந்தர், இதி ஆச்சார்யா, நித்திஷ், பாலாஜி
இயக்கம் : இல.சண்முக சுந்தர்
இசை : பிரசாந்த் விஹாரி
மக்கள் தொடர்பு : A.ஜான்
