2004ஆம் ஆண்டு காலகட்டம். தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்திருக்கும் மேக்கரை என்னும் அமைதியான மலைக் கிராமம். அங்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அசம்பாவிதத்தால் ‘வன மங்கை’ அளித்த சாபம்தான் இதற்கு காரணம் என நம்பும் கிராம மக்கள், சாப நிவர்த்திக்காகப் பூஜைகளைச் செய்து பயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.
கிராம மக்கள் பீதியில் இருக்கும் அந்தச் சமயத்தில், ஜூன் 1ஆம் தேதி மேக்கரை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறார் சித்து. அவர் தனது மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் ஊருக்குள் நுழைகிறார். அவருக்கு முன் அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ரித்விகாவின் கணவரும் இதேபோல் மர்மமான முறையில் இறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் நாட்டமை வேல ராமமூர்த்தி, பரம்பரை பரம்பரையாக நம்பப்படும் வன மங்கையின் சாபத்தைப் பற்றிக் கூற, பகுத்தறிவு சிந்தனை கொண்ட சித்து அதை முற்றிலுமாக மறுக்கிறார். இதற்கிடையே, காதலனைத் தேடி வரும் இளம் பெண், அவரது தோழி என அடுத்தடுத்து மாயமாகி, இறுதியில் மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார்கள்.
கான்ஸ்டபிள் பிரதீப்பின் உதவியோடு சித்து தீவிர விசாரணையில் இறங்கும்போதே, அடுத்தடுத்த மர்மக் கொலைகள் ஊரையே உலுக்குகின்றன. மேக்கரை கிராமத்தை அச்சுறுத்தும் அந்த மர்மக் கொலையாளி யார்? கொலைகளின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை என்ன? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் திகிலாகச் சொல்வதே ‘தி டார்க் ஹெவன்’.
மொத்தத்தில் ‘தி டார்க் ஹெவன்’ – தரமான த்ரில்லர் விருந்து!
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : சித்து சித், தர்ஷிகா நவரத்தினராஜா,ரித்விகா,வேளா ராமமூர்த்தி, சரண், பிரதீப்
இயக்கம் : பாலாஜி
இசை : சக்தி பாலாஜி
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்
