நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றும் அசோக் செல்வனும் பிரீத்தி முகுந்தனும், பெற்றோரின் கடும் எதிர்ப்பைக் கடந்து காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள்.
மாணவப் பருவத்திலிருந்தே சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Homestay) நடத்த வேண்டும் என்பது பிரீத்தியின் நீண்ட நாள் கனவு. தன் மனைவியின் லட்சியத்தை நிறைவேற்றத் துணியும் அசோக், மலைக்கிராமம் ஒன்றில் பல ஆண்டுகளாக விற்கப்படாமல் இருக்கும் ரேவதியின் வீட்டை விலைக்கு வாங்குகிறார்.
ஆனால், அந்த வீட்டின் மீது கண் வைக்கும் உள்ளூர் அரசியல்வாதி கதிர் பாலு, வழக்கறிஞர் சாபுமோன் மற்றும் காவல் ஆய்வாளர் மஹா டெல்லி கணேஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து, தம்பதியினருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களைத் தருகிறார்கள். அரசு உரிமம் பெற விடாமல் தடுத்து முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்த அதிகார வர்க்கத்தின் சதிகளையும், ஆபத்தான தடைகளையும் கடந்து மனைவியின் கனவை அசோக் எவ்வாறு நனவாக்குகிறார் என்பதே ‘அன்பில் அவன்’ படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘அன்பில் அவன்’ – காதல் போராட்டம்!
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : அசோக் செல்வன் ,பிரீத்தி முகுந்தன் ,ரேவதி,கதிர் பாலு ,சாபுமோன் அப்துசமத்
இயக்கம் : ஆர். கார்த்திகேயன்
இசை : கோவிந்த் வசந்தா
மக்கள் தொடர்பு: யுவராஜ்
