பணமே வாழ்க்கை என்று வாழும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரி (ஃபஹத் பாசில்), குறுக்கு வழியில் லாபம் ஈட்ட முயன்று உள்ளூர் தாதா மகேஷ் மஞ்ச்ரேகரிடம் மாட்டிக்கொள்கிறார். இரண்டு நாட்களுக்குள் 25 லட்சம் ரூபாயைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூரி, பண நெருக்கடியைச் சமாளிக்க எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியை (சாரா பாலேகர்) கடத்துகிறார்.
ஆனால், தான் கடத்தியிருப்பது உயிருடன் இருக்கும் சிறுமியை அல்ல, மாறாக அவளது ஆத்மாவைத் தான் என்பது சூரிக்குத் தெரிவதில்லை. தான் இறந்துவிட்டோம் என்பதை அறியாத அந்தச் சிறுமி, காணாமல் போன தன் பெற்றோரைத் தேடித் தருமாறு சூரியின் உதவியை நாடுகிறாள். சூரியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அந்த ஆத்மாவுடன் அவர் மேற்கொள்ளும் பயணத்தில் பல சுவாரசியமான திருப்பங்கள் ஏற்படுகின்றன.
ஒரு கட்டத்தில் அவள் இறந்துவிட்டதை சூரி உணரும் அதே தருணத்தில், சிறுமியைக் கடத்திய குற்றத்திற்காகக் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்படுகிறார். இதன் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன? சிறுமியின் பெற்றோருக்கு என்ன நேர்ந்தது? சூரியால் அவர்களுக்கு உதவ முடிந்ததா? போன்ற கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமான பாணியில் விடை சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ -ஆத்மாவின் தேடல்!
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : ஃபஹத் ஃபாசில் ,சாரா பாலேகர்,மகேஷ் மஞ்ச்ரேகர் ,சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு,சுப்பராஜு
இயக்கம் : ஷஷாங்க் யேலேட்டி
இசை : கால பைரவா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
