வட சென்னையில் மூன்று சகோதரர்களின் குடும்பங்கள், ஒரே கூட்டுக்குடும்பமாக மிகவும் பாசத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை மூத்த அண்ணனாக முன்னின்று வழிநடத்துகிறார் ஜெயப்பிரகாஷ்.மற்ற இரு சகோதரர்களாக சுப்ரமணியம் சிவா மற்றும் பிரசன்னா பாலச்சந்தர் நடித்துள்ளனர்.
ஒரு ஏழை நடுத்தரக் குடும்பத்தின் எளிய வாழ்க்கையில், ஒரு உள்ளூர் MLA-வின் ₹5 கோடி கள்ளப்பணம் எதிர்பாராதவிதமாக இந்த குடும்பத்து சிறுவர்கள் கையில் கிடைக்கிறது. அதுவரை நேர்மையாக வாழ்ந்த குடும்பத்தினரின் மனதிற்குள் பேராசை எனும் நச்சு விதை முளைக்கிறது. விளைவு, தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் தூணாக விளங்கும் ஜெயப்பிரகாஷின் வார்த்தையை முதல்முறையாக மீறி, அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கிறார்கள்.
காணாமல் போன அந்தப் பணத்தைத் தேடி, உள்ளூர் அரசியல் புள்ளியான MLA-வின் கொடூர ஆட்கள் ஊரெங்கும் வெறித்தனமான மனித வேட்டையைத் தொடங்க, ஒரே நேரத்தில் உயிர்பயமும் பணப் பேராசையும் ஆட்கொள்ள, அந்தக் குடும்பத்தின் அசைக்க முடியாத பாசக் கோட்டையில் விரிசல் விழுகிறது. MLA-வின் ஆட்கள் நடத்தும் இந்த ஆபத்தான வேட்டையில் இருந்து, அந்த எளிய குடும்பம் எப்படி சாதுரியமாக தப்பியது என்பதே படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘ஆல் பாஸ்’ – பேராசை
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ‘பிக் பாஸ்’ ஜனனி குணசீலன், வி. ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா
இயக்கம் : மைதீன்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
தணிக்கை சான்றிதழ்: UA13+
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
