பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், ‘ஏஒ டி’ (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார்.
தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு மாறான திரைப்பட உருவாக்க அணுகுமுறையாலும் அறியப்படும் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts ) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema ) வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பங்களிப்பு படத்திற்கு மேலும் நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் துல்கர் சல்மான், மீண்டும் ஒரு அழகான திரைப்படத்துடன் ரசிகர்களைச் சந்திக்கிறார். இப்படத்தில் அவர் இணைந்திருப்பதே ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மானின் தனிச்சிறப்பு என்னவென்றால், கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், அவர் ஒரு நல்ல கதையை நம்பி அதில் நடிக்க முன்வருகிறார். அவரைப் பொறுத்தவரை, முக்கியமானது தனது கதாபாத்திரம் மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் திரைப்படமும்தான்.
சாத்விகா வீரவல்லிக்கு இது ஒரு கனவு போன்ற அறிமுக வாய்ப்பாக அமைந்துள்ளது. கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். எளிமையான, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றத்துடன், பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் கொண்ட கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் கிராமப்புற வாழ்க்கையின் இயல்பையும் அழகையும் உண்மைத்தன்மையுடன் காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல், ஜி.வி. பிரகாஷ் குமார் தனது உணர்வுப்பூர்வமான பின்னணி இசையின் மூலம் படத்தின் உணர்வுகளின் தாக்கத்தை மேலும் அதிகரித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்வேதா சாபு சிரிலின் சிறப்பான பணி, படத்தின் காட்சியமைப்புக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.
இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அகில இந்திய அளவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.
ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் வழங்கும் இப்படம், ‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ ஆகிய படங்களின் மூலம் உருவான மறக்க முடியாத கூட்டணிக்குப் பிறகு, துல்கர் சல்மானை ஸ்வப்னா சினிமாவுடன் மீண்டும் இணைக்கிறது.
வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஏ ஒ டி ‘ திரைப்படம், இந்த நிறுவனங்களின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: பவன் சாதினேனி
எழுத்தாளர்: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்

