மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் (Sai Durgha Tej) , இயக்குநர் ரோஹித் KP( Rohith KP) , K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy) மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரின் கூட்டணியில், பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ( Primeshow Entertainment’s ) மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமான ‘SYG’ (‘சம்பராலா ஏடி கட்டு’) படத்தின் 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற தீவிரப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரோஹித் KP இயக்கத்தில் உருவாகும் ‘சம்பரலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு! ஜனவரி 12, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், இயக்குநர் ரோஹித் KP இயக்கத்தில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’ (SYG). இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ‘ஹனுமேன்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தைத் தயாரித்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் K. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்தின் இதுவரையிலான மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடும் வகையில், படத்தின் உருவாக்கப் பணிகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படக்குழுவினரின் உணர்வுப்பூர்வமான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. சாய் துர்கா தேஜின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய படமாகக் கருதப்படும் ‘சம்பராலா ஏட்டி கட்டு’, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்த தருணத்தில், படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் சாய் துர்கா தேஜ். இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். ஒருவரையொருவர் கட்டித்தழுவியும், தண்ணீர் மற்றும் படப்பிடிப்பிற்காக உருவாக்கப்பட்ட ரத்தத்தைத் தெளித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
‘சம்பராலா சங்கராந்தி’ என்ற பெயரில் இப்படத்தைப் படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சங்கராந்தி பண்டிகைக் காலத்தில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட நடிகர் தனஞ்செயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு, நரேஷ் வி கிருஷ்ணா, சாய் குமார், ஸ்ரீகாந்த் மற்றும் அனன்யா நாகள்ள உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் பிரம்மாண்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவை வெற்றிவேல் பழனிசாமி கவனிக்க, இசையமைப்பை B.அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். நவீன் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பையும், காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.
இப்படத்தை உலகளவில் 2027 ஜனவரி 12 அன்று வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரம்மாண்டமான உருவாக்கம், சாய் துர்கா தேஜின் அதிரடியான தோற்றம் மற்றும் பண்டிகைக் கால வெளியீடு ஆகியவற்றால், 2027 சங்கராந்தி வெளியீடுகளில் முக்கியமான திரைப்படமாக ‘சம்பராலா ஏடி கட்டு’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படக்குழு விவரம்
நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, தனஞ்செயா, ஜெகபதி பாபு, நரேஷ், சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள, ரவி கிருஷ்ணா.
எழுத்து மற்றும் இயக்கம்: ரோஹித் KP
தயாரிப்பாளர்கள்: கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி
இசை: B . அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு: நவீன் V. கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பை : காந்தி நதிக்குடிகர்
ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா
வெளியீட்டுத் தேதி: ஜனவரி 12, 2027
