நாயகன் அருண் கார்த்திக்கும், நாயகி எனாக்க்ஷி கங்குலிக்கும் கொடைக்கானலில் திருமணம் செய்ய இருவீட்டாராலும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது. அழகிய மலைப்பிரதேசமான கொடைக்கானலில், திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை அழகாகப் பதிவு செய்ய ‘ப்ரி வெட்டிங் ஷூட்’ (Pre-wedding shoot) நடத்த திட்டமிடுகிறார்கள். இதற்காக, அடர்ந்த பனி மூடிய மலைப் பகுதியில், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஒரு தனிமையான பங்களாவிற்கு இந்த இளம் ஜோடி தங்களது குழுவினருடன் செல்கிறது.
அங்கு புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக ஒரு நள்ளிரவில் எனாக்க்ஷி கங்குலி அந்த பங்களாவில் இருந்து திடீரென மாயமாகி விடுகிறார். காலையில் எழுந்து பார்க்கும் போது மணப்பெண் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியில் உறைகிறார் அருண் கார்த்தி. சுற்றிலும் தேடியும் அவள் கிடைக்காததால், பதற்றத்துடன் கொடைக்கானல் காவல் நிலையத்திற்குச் சென்று, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து இன்ஸ்பெக்டர் சேரன்ராஜிடம் புகார் அளிக்கிறார்.
அருண் கார்த்தியின் புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் மற்றும் அவரது தீவிர நம்பிக்கைக்குரிய கான்ஸ்டபிள் கருப்பு நம்பியார் ஆகியோர் இந்த மர்மமான வழக்கைக் கையில் எடுக்கிறார்கள். அந்த பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் கான்ஸ்டபிள் கருப்பு நம்பியாருடன் இணைந்து தீவிரமான தேடுதல் வேட்டையில் இன்ஸ்பெக்டர் இறங்குகிறார்.எனாக்க்ஷி கங்குலி கண்டுபிடிக்கப்பட்டாரா? என்பதே’பனி விழும் இரவு’ படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘பனி விழும் இரவு’ – மர்மத் தேடல்
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள்:அருண் கார்த்தி, எனாக்க்ஷி கங்குலி, சேரன்ராஜ், கருப்பு நம்பியார், சரவணசக்தி, செ. ரா. ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத்
இசை : சதாமுருகன்
இயக்கம் : செ. ரா. ராஜேஷ்
தணிக்கை சான்றிதழ் :U/A
மக்கள் தொடர்பு : சரண்
