குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ், பாவனா – ஆதித் பிரசனாகுமார் தயாரிப்பில் இயக்குநர் ரியாஸ் மராத் இயக்கத்தில் பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அனோமி’.
தடவியல் நிபுணரான நாயகி பாவனா, ஒரு சாலை விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். இதனால் பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதோடு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் பாவனாவின் தம்பி போன்று மண் ரீதியாக இருக்கும் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த வழக்கை காவல்துறை அதிகாரி ரஹ்மான் விசாரணை மேற்கொள்ள சில தினங்களில் அதே முறையில் பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.
இந்த இரண்டு உடல்களையும் பாவனா பிரேத பரிசோதனை செய்ய இது தற்கொலை இல்லை கொலை என்பதை கண்டுபிடிக்கிறார். இதே சமயம் இளம் பெண் ஒருவர் இதே பாணியில் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து ரஹ்மான் இந்த வழக்கை விசாரிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.
மறுபுறம் பாவானா, கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்குகிறார். இறுதியில் கொலைக்கான காரணம் என்ன? பாவனா – ரஹ்மான் உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே ‘அனோமி’ படத்தின் மீதிக்கதை.
தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாசக்கார அக்காவாக வாழ்ந்திருக்கிறார். கோபம், துணிச்சல், எமோஷனல் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஹ்மான் கொலைகாரனை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டும் வகையில் இருந்தது. ரஹ்மான் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் ஷெபின் பென்சன், காதலனாக நடித்திருக்கும் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் அருமை . பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. சுஜித்சாரங், ஒளிப்பதிவு கொடுத்தால் பலம்.
அக்கா – தம்பி பாசத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் யாஸ் மராத் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சிகளும் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘அனோமி’ – மர்ம மரணம்
மதிப்பீடு : 4.15/5
நடிகர்கள் : பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா
இசை : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
இயக்கம் : ரியாஸ் மராத்
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்