ஏசிஎம் சினிமா சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் ஜெகன் ராயன். இயக்கத்தில் நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரூம் பாய்’.
ஏலகிரியில் இருக்கும் குயின் மார்க் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அங்கிருந்து. தப்பி செல்ல நினைக்க அவர்களை மேலாளர் அடித்து உதைத்து தப்பிச்ச செல்ல முடியாத அளவிற்கு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொல்கிறார்.
இதே சமயம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியேறிய வரும் நாயகன் நிகில் வேலைத் தேடி ஏலகிரிக்கு வருகிறார். அங்கிருக்கும் குயின் மார்க் ஹோட்டலில் நிகில், அவரது நண்பர் காத்து கருப்பு இருவரும் வேலைக்கு சேர்கிறார்.
இதே வேளையில் கூர்நோக்கு இல்லத்தின் வார்டன் திடீர் என காணாமல் போக அவர் குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊரை சுற்றிப் பார்க்க வரும் நாயகி ஹர்ஷாவை பார்த்தும் நிகில் காதல் கொள்கிறார். இதே சமயம் புதுமண ஜோடி ஒன்று அங்கு தங்க வருகிறார்கள். அவர்களுடைய அறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து இது குறித்து மேலாளரிடம் கூறுகிறார்கள். மேலாளர் வந்து பார்த்தால் அது போல கேமரா ஒன்றும் இல்லை.
இதனையடுத்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மேலாளரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருக்கும் ஹார்ட் ட்ரைவரை எடுத்து செல்கிறார். மேலாளர் கொலை மற்றும் ஆதாரங்கள் காணாமல் போனதால் அந்த ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் முகமூடி அணிந்த வந்த மர்ம நபர் யார்? மேலாளரை கொலை செய்ய காரணம் என்ன ? காணாமல் போன வார்டன் கிடைத்தாரா? இல்லையா? என்பதே ’ரூம் பாய்’ படத்தின் மீதிக்கதை.
சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் நிகில் துடிப்பு மிக்க இளைஞர் கதாபத்திரத்தில் சரியாக பொருந்தியிருக்கிறார். தங்கை பாசம், நட்பு , குறிப்பாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். மனதில் இருக்கும் சோகத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷா படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைப்பாக செய்திருக்கிறார். காத்து கருப்பு கலை வரும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.
ஹோட்டல் அதிபராக நடித்திருக்கும் அருண் ராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகன் அப்பாவாக வரும் பிர்லா போஸ் , இமான் அண்ணாச்சி, மும்பை மாடல் அழகி நிதிமரோலி என படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. சி பாரதி ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ரகசிய கேமரா , கள்ளத் தொடர்பு. பணம் பறிப்பு ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். பெண் குழந்தைகள் தெரிந்தவர்கள் மூலமே எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’ரூம் பாய்’ – எதிரிக்கு எமன்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை
இசை : வேலன் சகாதேவன்
இயக்கம் : ஜெகன் ராயன்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்