ஆரன் பிக்சர்ஸ் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரிப்பில் இயக்குநர் தேனி கே. பரமன் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ரோஸ்மின், சென்ட்ராயன், தன்யா, தேனி கே. பரமன், முனிஷ்காந்த், அப்புக்குட்டி, கூல் சுரேஷ், மணிமேகலை, கொட்டாச்சி, மொசக்குட்டி, கிங் காங் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காக்கா’.
மதுரையில் நாயகி ரோஸ்மின் திருமணம் நடக்காததால் தனது குடும்பத்துடன் சென்னையில் குடியேறுகிறார் பெயிண்டர் உள்ளிட்ட சில பல வேலைகளை செய்து வரும் சென்ராயன் ரோஸ்மின் தங்கை தனியா மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலை தன்யாவிடம் கூறுகிறார்.
செண்ட்ராயனை நிராகரிப்பதற்காக, தனது அக்காவின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை, அதன் காரணமாக மதுரையில் இருந்து சென்னை வந்தது குறித்து தன்யா கூறுகிறார். அக்காவிற்கு திருமணம் நடந்தால் மட்டுமே காதல், கல்யாணம் பற்றி தான் யோசிக்க முடியும், என்கிறார்.
இதையடுத்து நாயகி ரோஷ்மினுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளையை தேடும் செண்ட்ரான் பல குழப்பத்தை ஏற்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் நாயகி ரோஷ்மின், இனிகோ பிரபாகரன் இருவரும் சிறு மோதலில் சந்திக்க பின்பு அது காதலாக மலர்கிறது.
இந்நிலையில் சென்ராயன் நாயகி ரோஷ்மின், இனிகோ பிரபாகரன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதே வேளையில் ஏற்கனவே ரோஷ்மினுக்கு நிச்சயம் செய்யப்பட்ட தேனி கே.பரமன், ரோஷ்மினை தேடி சென்னைக்கு வருகிறார்.
இறுதியில் சென்ராயன் நாயகி ரோஷ்மின், இனிகோ பிரபாகரன் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தாரா? இல்லையா? தன்யா சென்ராயன் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை ’காக்கா’ படத்தின் மீதிக்கதை.
இயற்கை ஆர்வலராக நடித்திருக்கும் இனிகோ பிரபாகரன் படத்தின் முதல்பாதியில் ஒரு காட்சியில் வருகிறார். இரண்டாம் பாதி படம் முழுவதிலும் பயணித்து தனது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்துயிருக்கிறார். மரம் வளர்ப்பது முக்கியத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷ்மின் அழகு, நடிப்பு, நடனம் என அனைத்தையும் சரிசமமாக கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். இரண்டாவது நாயகியாக தன்யா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் சென்ராயன் இதுவரை காமெடி மாறும் வில்லத்தனம் செய்து வந்தவர் இந்த மூலம் ஆரம்பம் முதல் இறுதிவரை நாயகனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திருமணம் செய்து வைப்பதற்காக இவர்படும் பாடுதல் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.
பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் தேனி கே.பரமன், வில்லத்தனத்தில் காட்டிலும் காமெடியில் கலக்கி இருக்கிறார்.
அரசியல்வாதியாக வரும் முனீஷ்காந்த், அப்புக்குட்டி, கூல் சுரேஷ், மணிமேகலை, கொட்டாச்சி, மொசக்குட்டி, கிங்காங் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெவின் டி.கோஸ்டாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. சுரேஷ்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக உள்ளது.
கல்யாண கலாட்டாவை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள காதல் மற்றும் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் தேனி கே.பரமன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கதையோடு பயணிக்கும் விதத்தில் காமெடி கலந்து கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’காக்கா’ – கலாட்டா கல்யாணம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : இனிகோ பிரபாகர், ரோஸ்மின், சென்ட்ராயன், தன்யா, தேனி கே. பரமன், முனிஷ்காந்த், அப்புக்குட்டி, கூல் சுரேஷ்
இசை : கெவின் டி.கோஸ்டாவின்
இயக்கம் : தேனி கே.பரமன்
மக்கள் தொடர்பு : கிளாமர் சத்யா