மெட்ராஸ்காரன்படத்தின்வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ்தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சாசுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன்திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதேநடைபெற்றது.
இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜெகதீஸ்பேசியதாவது..
SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமானஅண்டர் – 18திரைப்படத்தின்பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.
இந்தப்படத்தின்தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும்பணியாற்றியவர். அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப்படத்தில் இணைந்தார். அவர் வந்ததிலிருந்துஇந்தப்படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு, அனைத்து விஷயங்களிலும்பங்களித்து வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். இந்தப் படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுதீப் சார் இந்தப்படத்தில்இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான். அவர் சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார். கதையைக்கேட்டவுடன், “உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார். நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப்படத்தை செய்கிறேன்” என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். இன்று அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.
இந்தப் படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமானபடைப்பின்வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின்அடித்தளஉண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் – 18” (Under – 18) உருவாகவுள்ளது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன் எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்டக்ரைம்நெட்வொர்க்கில்சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் – 18” (Under – 18) படத்தின்மையக் கதை. குற்ற உலகின்கொடூரமுகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின்உணர்வுகளையும், எமோஷனல்டிராமாவாகஇப்படம்சொல்லவுள்ளது.
இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின்அறியப்படாதக்ரைம்பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின்தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமானகதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களைஆழமாகத்தொடும் வகையில் உருவாகவுள்ளது.
இப்படத்தில்கிச்சாசுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர்சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில்நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில்இணையவுள்ளனர்.
“Under – 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படதிட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்புஆகியவற்றுடன்இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப குழு
தயாரிப்பு : SR PRODUCTIONS
தயாரிப்பாளர் : ஜெகதீஸ்
இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்
இசை : சாம்சி.எஸ்
பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக்நேத்தா
பப்ளிசிட்டிடிசைன் : V.M. சிவகுமார்
புரடக்சன்எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி
எக்ஸிக்யூட்டிவ்புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி, அகல்யா வெங்கடேசன்
புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா
PRO – சதீஷ் (AIM)



