கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மக்கள் தலைவா’.
பெருந்தலைவர் காமராஜர் கொடுத்த கல்வியால் படித்து பெரிய தொழிலதிபராகும் ராதாரவி, வெளிநாட்டில் இருந்து தேனீ மாவட்டத்திற்கு வருகிறார். மறுபுறம் சமூக போராளி மற்றும் அரசில்வாதியான நாயகன் ரவி மரியா மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மதுபான கடைக்கு செல்லும் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இயக்குநர் பேரரசிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக கேட்ட இந்த பிரச்சனையை ரவிமரியா கையில் எடுக்க ஆளும் கட்சி அமைச்சர் பழ. கருப்பையாவிற்கு இது மிகப்பெரிய தலைவலியை உண்டாக்குகிறது.
இதனையடுத்து தொழிலதிபரான ராதாரவி, ரவிமரியாவை அழைத்து தான் தொடங்கும் உள்ளே வெளியே என்ற புதிய கட்சிக்கு தலைவராக இருக்குமாறு கூறுகிறார். அதை ஏற்றுக் கொள்ளும் ரவிமரியா மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக இலவச ரீசார்ஜ் மற்றும் ரூபாய் 5,000 கொடுத்து அனைத்து மக்களின் ஆதரவை பெறுகிறார்.
இதனால் ஆளும்கட்சி ரவிமரியாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறது. இதே சமயம் இடைத்தேர்தலுக்கான நாளும் நெருங்க ரவிமரியா ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகிறார். அங்கு தீவிர சிகிச்சையில்
அனுமதிக்கப்படும் ரவிமரியா சுயநினைவை இழக்கிறார்.
இறுதியில் ரவிமரியா மருத்துவனையில் இருந்து மீண்டு வெளியே வந்தாரா? இல்லையா? முதலமைச்சரானது யார் ? என்பதே ‘மக்கள் தலைவா’ படத்தின் மீதிக்கதை.
தமிழ்க்குடிமகன் என்கிற அரசியவாதியாக நடித்திருக்கும் கதைநாயகன் ரவிமரியா இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். மக்களை கட்சியில் சேர்ப்பதற்காக இவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது, ஒரு பாடலுக்கு நாயகியுடன் போட்டிருக்கும் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது.
தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி சாணக்கியராக முழுப்படத்தையை தாங்கி நிற்கிறார். படத்தில் இறுதிக்காட்சியில் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடிக்கிறார்.
டீச்சராக நடித்திருக்கும் நாயகி அக்சரா விஜய் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். முதலமைச்சராக வரும் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் , அமைச்சராக வரும் பழ. கருப்பையா , அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு , இயக்குனர் ரேம் தேவ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் துளசி ராமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
தொழில் அதிபர்களின் செல்வாக்கு , தமிழக அரசியல் , இலவசம் , மக்கள் மனநிலை, தகுதியற்ற அரசியல்வாதிகள் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் ராம் தேவ் , இத்திரைப்படத்தில் அரசில் தலைவர்கள் மக்களை எப்படி எல்லாம் ஆசி வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இன்றைய அரசியலை கவனமாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘மக்கள் தலைவா’ – நையாண்டி அரசியல்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு,
இசை : துளசி ராமன்
இயக்கம் : ராம் தேவ்
மக்கள் தொடர்பு : வேலு
