டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா,, சேத்தன்,ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பராசக்தி’ இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
1960 கால கட்டத்தில் நடக்கும் கதை மதுரையில் உள்ள கல்லூரியில் படிக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படையை நடத்தி வருகிறார் . இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள் இரவில் சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர்கள் இரயிலை வழிமறித்து எரிக்கிறார்கள். அந்த இரயிலில் பயணிக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ரவி மோகனின் ஒரு விரல் பறிபோகிறது.
இந்த இரயில் எரிப்பு சம்பவத்தில் தனது நண்பனை பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன் புறநானூறு மாணவப்படையை கலைத்துவிடுகிறார். அதே சமயம் சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் துடித்துக் கொண்டிருக்கிறார்.
சில வருடம் கடந்த நிலையில் சிவகார்த்திகேயன் தம்பி அதர்வாவும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் முடிவில் அவரும் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக களம் இறங்குகிறார்.
இறுதியில் தம்பிக்காக போராட்டத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன் அதில் வெற்றி பெற்றாரா ? இல்லையா? சிவகார்த்தியேகன் – ரவிமோகன் மோதலில் வெற்றி பெற்றது யார் ? என்பதே ‘பராசக்தி’ படத்தின் மீதிக்கதை.
செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை வழி நடத்தி செல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பாசம், நட்பு, சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை கொடுத்து அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார். கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இதுவரை நாயகனாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக கண்களாலே மிரட்டி எடுக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா தமிழில் அறிமுகபடம் போல இல்லாமல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தம்பியாக நடித்திருக்கும் அதர்வா முரளி துடிப்பு மிக்க இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். சேத்தன், குரு சோமசுந்தரம், சிறப்பு காட்சியில் வரும் ராணா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு அந்த காலகட்டத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா இத்திரைப்படத்தில் செழியன் – ரத்னமாலா காதல், சின்னதுரை – ரத்னமாலா நட்பு. இந்தி எதிர்ப்பு போராட்டம். திருவின் பழிவாங்கும் எண்ணம் என அனைத்து கலந்து உண்மைச் சம்பவங்களை நினைவுப்படுத்தும் வகையில் கதைக்களம் மற்றும் காட்சிகளை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.
மொத்தத்தில் ‘பராசக்தி’ – சரித்திர சாதனை படைக்கும்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் : சுதா கொங்கரா
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)