டக்டம் மோஷன் பிக்சர்ஸ் – அனிஷ் மாசிலாமணி தயாரிப்பில் இயக்குனர் ஹரி வெங்கடேசன் இயக்கத்தில் அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி, கே.பி.ஒய் தீனா, ராமச்சந்திரன் துரைராஜ், கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஃப்ரைடே’ (Friday)
நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய செல்கிறார்கள். சென்ற இடத்தில் தீனா எதிர்பாராத விதமாக கத்தி குத்துக்கு ஆளாக, அவரை காப்பாற்றுவதற்காக அனிஷ் மாசிலாமணி அவருடன் ஒரு மறைவான இடத்திற்கு செல்கிறார்.
தாக்குதலில் உயிர் தப்பித்தவரின் அடி ஆட்கள் கொலை செய்ய முயன்றவர்களை தேடுகிறார்கள். மறுபக்கம், தீனாவும் அனிஷ் மாசிலாமணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடும் கூட்டத்திற்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறார்.
இறுதியில் நாயகன் அனிஷ் மாசிலாமணி எதிரிகளிடம் இருந்து உயிர் பிழைத்தாரா ? இல்லையா? தீனாவின் சதித்திட்டத்தை அனிஷ் மாசிலாமணி கண்டுபிடித்தாரா ? இல்லையா? என்பதே ’ஃப்ரைடே’ படத்தின் மீதிக்கதை.
ரவுடி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அனிஷ் மாசிலாமணி எந்த கதாபத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். பாசம், அக்கறை , கருணை , சண்டை என அனைத்திலும் தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கேபிஒய் தீனா ஆரம்பத்தில் அமைதியான கதாபாத்திரத்தில் வந்து அடுத்து அதிரடி காட்டியிருக்கிறார். அரசியல்ப்பவாதியாக வரும் மைம் கோபி அனுபவ நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் மார் வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் டுமே இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஜானி நாஷ், ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.
ரவுடி வாழ்க்கையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி வெங்கடேசன் இத்திரைப்படத்தில் கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் ’ஃப்ரைடே’ (Friday) – ரவுடி வாழ்க்கை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி, கே.பி.ஒய் தீனா, ராமச்சந்திரன் துரைராஜ், கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன்
இசை : டுமே
இயக்கம் : ஹரி வெங்கடேசன்
மக்கள் தொடர்பு : திரு