ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், பி.எல். தேனப்பன், ஆனந்தராஜ் , நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வா வாத்தியார்’.
1987-ல் நடக்கும் கதை எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தாத்தா ராஜ்கிரண் எம்.ஜி.ஆர் மறைவால் அதிர்ச்சி அடைகிறார். அதே நேரம் அவருக்கு பேரன் கார்த்தி பிறக்கிறார். எம் ஜி ஆர் இறந்த அந்த நேரத்தில் பேரன் பிறந்ததால் அவர் தான் அடுத்த எம் ஜி ஆர், நேர்மையாக வளர வேண்டும் என நினைக்கிறார்.
முதலில் எம்.ஜி.ஆர். மாதிரி நேர்மையாக வளரும் கார்த்தி பிறகு நம்பியார் குணம் கொண்டவராக வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராகும் கார்த்தி நேர்மையானவராக இல்லாமல் லஞ்சம் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாறுகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ‘மஞ்சள் முகம்’ என்ற பெயரில் அரசின் போலி முகத்திரையை கிழித்து வரும் சில இளைஞர்களை ‘என்கவுன்ட்டர்’ செய்ய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து அழிக்கும் பணியில் கார்த்தி ஈடுபடுகிறார்.
கார்த்தியின் உண்மையான முகம் ராஜ்கிரணுக்கு தெரியவர கவலையில் இறந்துபோகிறார். இதனையடுத்து கார்த்தி உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இறுதியில் கார்த்தி என்கவுன்டரில் இருந்து இளைஞர்களை காப்பாற்றினாரா? இல்லையா? கார்த்தி தாத்தா ராஜ்கிரண் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ’வா வாத்தியார்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கார்த்தி ஒரே நேரத்தில் நல்லவராகவும் , கெட்டவராகவும் நடித்திருக்கிறார். இரண்டிலும் வேறுபட்ட நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் போல நடை, உடை, நடனம், பேச்சு , சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டி அழகு தேவதையாக வந்து இளைஞர்கள் மனதை கொள்ளை அடிக்கிறார். நடிப்பபை வீட்டா கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் தீவிர ரசிகராக நடித்திருக்கும் ராஜ்கிரண் அழுத்த்மான் கதாபாத்திரத்தில் அளவான நடிப்பால் கவர்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ் அமைதிப்படை அம்மாவாசை கதாபாத்திரத்தை நினைவுப்படுத்துகிறார்.
சத்யராஜ் மகளாக வரும் ஷில்பா மஞ்சுநாத், முதல்வராக வரும் நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்மா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றவாறு உள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது, பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு உளள்து. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த சம்பவத்தை மையாக கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர் நலன் குமாரசாமி. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் சக்தியை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் அதன் நம்பகத்தை தன்மை எந்த விதத்திலும் பாதிக்க வகையில் கதையை அழகாக கையாண்டுயிருக்கிறார்.
மொத்தத்தில் ’வா வாத்தியார்’ – என்றும் மக்கள் மனதில் நிற்பவர்
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், பி.எல். தேனப்பன், ஆனந்தராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
இயக்கம் : நலன் குமாராசாமி
மக்கள் தொடர்பு : யுவராஜ்