கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’
ஊர் பஞ்சாயத்து தலைவரான ஜீவா ஊரில் நடக்கும் நல்லது கெட்டது என இரண்டிற்கு முதல் ஆளாக வந்து நிற்கக்கூடியவர் எதற்கு என்றால் மக்களின் வாக்குகளுக்காக இந்நிலையில் இதே ஊரில் வசிக்கும் இளவரசுவின் மகள் பிரார்த்தனா திருமண ஏற்பாட்டிற்கான வேலைகளை ஜீவா செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரரான தம்பி ராமையாவின் நோய்வாய்ப்பட்ட அப்பா இறந்து விடுகிறார். இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவருக்குமிடையே ஏற்கனவே நீண்ட நாளாகவே பகை இருந்து வருகிறது.
இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான், தனது தந்தையின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும், என்று தம்பி ராமையா பிடிவாதமாக இருக்கிறார். தன் மகள் திருமணம் தனது வீட்டு வாசலில்தான் நடக்க வேண்டும், என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார்.
இந்த இரண்டு குடும்பங்களையும் சமாதானப்படுத்தி இரண்டு நிகழ்வுகளை நடத்த ஜீவா நினைக்கையில் தம்பிராமையாவின் சித்தப்பா கொண்டு வந்த நாட்டு வெடி குண்டால் பெரிய சிக்கல் வருகிறது.
அதே சமயம் திருமண பெண் பிராத்தனா காணாமல் போகிறார். இறுதியில் ஜீவா கானம் போன பிராத்தனாவை கண்டுபிடித்தாரா? இல்லையா? திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதை நகைக்சுவை கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கும் திரைப்படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’
பஞ்சாயத்து தலைவராக நடித்திருக்கும் ஜீவா எதிர்த்த நடிப்பால் கவர்கிறார். எந்த இடத்திலும் தான்தான் நாயகன் என்று அலட்டிக்கொள்ளமால் கதைதான் முக்கியம் என்பதை உணர்ந்து நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதிக்காட்சியில் இவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. முழுப்படத்தையம் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார்.
திருமண பெண்ணாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
கதையின் மைய புள்ளியாக இருக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
எதிர்மறை அரசியல்வாதியாக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர், செய்யம் சகுனி வேலைகள் ரசிக்கவும் சிரிக்கவைக்கும் வைக்கிறது. சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. பப்ளு அஜு ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
திருமணம், சாவு, பகை, சண்டை ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள காமெடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ். இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். இத்திரைப்படத்தை பார்க்கும் போது மலையாள படத்தை பார்க்கும் மன நிறைவை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ – தலைவர் தலைமையில் பொங்கல்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர்,
இசை : விஷ்ணு விஜய்
இயக்கம் : நித்திஷ் சகாதேவ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 Media )