மிஷ்ரி எண்டர்பிரைசஸ் – சி.எஸ்.பத்மசந்த், சி.அரியண்ட் ராஜ், ரஜினி கிஷன் தயாரிப்பில் இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ரஜினி கிஷன், த்விவிகா, முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரஜினி கேங்க்’ .
ரஜினி சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் நாயகன் ரஜினி கிஷன், நாயகி த்விவிகா இருவரும் காதலிக்கிறார்கள். ஒருநாள் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு இவர்களோடு பயணிக்கிறார்.
மறுநாள் ஏற்காட்டில் இருக்கும் இவர்களை போலீஸ் துரத்துகிறது. மறுபுறம் நாயகியின் தாய்மாமன் கூல் சுரேஷ் மறுபக்கம் துரத்துகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்கும் காதலர்கள் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்
முதலிரவு அன்று நாயகி உடம்பில் பேய் ஒன்று புகுந்து கொண்டு நாயகன் ரஜினி கிஷனை கடுமையாக தாக்குகிறது. இறுதியில் நாயகன் ரஜினி கிஷன் பேயிடம் இருந்து நாயகியை காப்பாற்றினாரா? இல்லையா? நாயகி உடம்பில் புகுந்ததற்கான காரணம் என்ன ? என்பதே ‘ரஜினி கேங்க்’ . படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் நடிகர் ரஜினி கிஷன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். காதல், காமெடி, நடனம் , சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா அறிமுக நாயகி போல இல்லாமல் எதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். பேய் பிடித்தவராக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல்,காமெடி, நடனம் என அனைத்திலும் அச்சத்தியிருக்கிறார்.
முனீஷ்காந்த், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன், கல்கி, மனோகர் என படத்தில் நடித்த அனைவரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.என்.எஸ்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
காதல், காமெடி, பேய் என அனைத்தையும் கலந்து ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி இத்திரைப்டத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் கவரும் வகையில் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் .
மொத்தத்தில் ‘ரஜினி கேங்க்’ – காமெடி கலாட்டா
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ரஜினி கிஷன், த்விவிகா, முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
இயக்கம் : எம்.ரமேஷ் பாரதி
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)