பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் – சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் இயக்குனர் ஜெ,கே.சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், அஜய் கோஷ், சுனில், கல்யாண் மாஸ்டர், செண்ட்ராயன், கதிரவன், அகஸ்டியன், ஜான் விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரிவால்வர் ரீட்டா’
பாண்டிசேரியில் நடக்கும் 2 சம்பவங்களில் இருந்து கதை தொடங்குகிறது. மிகப்பெரிய ரவுடியான சூப்பர் சுப்பராயனை முன்பகையால் பழிதீர்க்க அஜய்கோஷ் துடிக்கிறார். நாயகி கீர்த்தி சுரேஷ் அம்மா ராதிகா, அக்கா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒருநாள் அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், சூப்பர் சுப்பராயன் போதையில் கீர்த்தி வீட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடியை கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் அடிக்கிறார்கள். மயங்கி கீழே விழுந்த ரவுடி சூப்பர் சுப்பராயன் இறந்து விடுகிறார்.
பிணத்தை அப்புறப்படுத்த தனது அம்மா ராதிகாவுடன், கீர்த்தி சுரேஷ் காரில் புறப்படுகிறார். இதற்கிடையில் அந்த பிணத்தை கைப்பற்றி பணம் பார்க்க நினைக்கும் கல்யாண் மாஸ்டர் கும்பல் கீர்த்தி சுரேசை துரத்துகிறது. அதேவேளை பழைய பகையை மனதில் வைத்து கீர்த்தி சுரேசை பழிவாங்க துடிக்கிறார் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்
இறுதியில் கீர்த்தி சுரேஷ் இந்த சிக்கலில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? சுனில் அப்பாவை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகியாக நடித்த்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சவாலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பாசம், அச்டின், காமெடி என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா அணுஒவ நடிப்பால் கவர்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் அவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, வில்லனாக வரும் அஜய் கோஸ், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் ஆகியோரது நடிப்பு கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.
கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. தினேஷ் கிருஷ்ணா.பி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
ரவுடி கொலையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ,கே.சந்துரு இத்திரைப்படத்தின் முதல் பாதி கொலை, காமெடி என நகர இரண்டாம் பாதி காமெடி , சேசிங், ஆக்ஷன் என விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’ரிவால்வர் ரீட்டா’ ஆக்ஷன் , காமெடி
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், ராதிகா, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், அஜய் கோஷ், சுனில், கல்யாண் மாஸ்டர், செண்ட்ராயன், கதிரவன், அகஸ்டியன், ஜான் விஜய்
இசை : ஷான் ரோல்டன்
இயக்கம் : ஜெ,கே.சந்துரு
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)