செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே ஜே சுரேந்தர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாயபிம்பம்’.
கடலூர் மத்திய சிறையில் இருக்கும் நாயகன் ஆகாஷ் அந்த சிறைச்சாலையின் ஜெயிலர் உயிரை காப்பாற்ற 2005 ஆண்டு முதல் படத்தின் கதை ஆரம்பமாகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவரான நாயகன் ஆகாஷ், அப்பா, அம்மா, அண்ணன் , அண்ணி மற்றும் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நாயகனுக்கு ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் ஆகிய நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்.
கேபிள் டிவி வேலை பார்ர்கும் ஹரி எத்தகைய பெண்களையும் எளிதில் வளைத்துப் போட கூடிய திறமையாளராக இருக்கிறார்.இந்நிலையில் பேருந்து பயணத்தின் போது தற்செயலாக நாயகி ஜானகியை நாயகன் ஆகாஷ் சந்திக்கிறார்.
ஒரு சிறு விபத்தில் மருத்துவ மனையில் நாயகன் ஆகாஷ் அனுமதிக்கப்பட்ட அங்கு நர்ஸாக வேலை பார்க்கும் ஜானகி ஆகாஷை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் நண்பன் ஹரி கொடுக்கும் தவறான யோசனையால் நாயகி ஜானகியை ஆகாஷ் பிரிக்கிறார்.
இறுதியில் ஆகாஷ் – ஜானகி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? நாயகன் ஆகாஷ் சிறைக்கு செல்ல காரணம் என்ன? என்பதே ’மாயபிம்பம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், எதிர்த்த நடிப்பின் மூலம் கவர்கிறார். காதலை காமமாக பார்ப்பதால் வாழ்க்கையை தொலைத்த இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், குடும்ப பாசம், அண்ணன் குழந்தை மீது காட்டும் அக்கறை , நட்பு என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஜானகி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் , நாயகன் குடும்பத்தினராக வருபவர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. எட்வின் சகாயின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
காதலை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர், இத்திரைப்படத்தில் தவறான புரிதலால் ஏற்படும் விளைவுகளையும் , உண்மையான உணர்வுகளின் வலிமையை சொல்லும் ஒரு உன்னத படைப்பு
மொத்தத்தில் ’மாயபிம்பம்’ – காதலுக்கு அழிவில்லை
மதிப்பீடு : 4.15/5
நடிகர்கள் : ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை
இசை : நந்தா
இயக்கம் : கே.ஜெ.சுரேந்தர்,
மக்கள் தொடர்பு : சிவா & சதிஷ் (AIM}