ஒரு சிறிய நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ‘E1’ எண் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) தான் முழு கதையும் ஒரு இரவுக்குள் நடக்கிறது. தனது கணவர் வேலை விஷயமாக வெளியில் சென்றிருக்க, தனது கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் நாயகி (மோனிகா செலினா).
நள்ளிரவில் தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது, வரவேற்பறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. அதிர்ச்சியோடு வந்து பார்க்கும் நாயகிக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே ஒரு முகமூடி அணிந்த நபர் (சதா நாடார்) ஒரு பிணத்தின் அருகில் நின்று கொண்டிருக்கிறார்.
பயந்து நடுங்கும் நாயகிக்கு முன்னால் தனது முகமூடியைக் கழற்றும் அந்த நபர், தான் ஒரு “மனித மிருகத்தை” (பாலியல் குற்றவாளி) கொன்றுவிட்டதாகக் கூறுகிறார். விடியும் வரை தான் அங்கேயே இருக்கப் போவதாகவும், தனக்கு ஒத்துழைப்பு தருமாறும் மிரட்டுகிறார். அதன் பின் அந்த ஒரு இரவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் என்ன நடந்தது? அந்த நபர் யார்? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘E1’ –பாதுகாப்பு
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : சதா நாடார், மோனிகா செலினா, பேபி ஷிவ், பாண்டி, சுந்தரம், ஜெயசிவா, சபரி மணிகண்டன்
இயக்கம் : : சதா நாடார் மற்றும் மோனிகா செலினா
இசை: இ. ஜே. ஜான்சன்
தணிக்கை சான்றிதழ்: U/A
மக்கள் தொடர்பு : சரண்
