விண்வெளி இயற்பியல் படிக்கும் கிஷோர் (கிஷ்), அவனது நெருங்கிய நண்பர்களான ரஷ் மற்றும் தஷ் ஆகிய மூவரும் ஒரு சூழ்நிலையில் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். தங்க இடமில்லாமல், ‘பிளாக் ஹோல்’ என்று அழைக்கப்படும் விசித்திர விஞ்ஞானி பத்மநாபனின் தனிமையான பங்களாவில் தஞ்சமடைகிறார்கள்.
அங்குள்ள ட்ரோன் கேமராவை கிஷ் வேடிக்கையாக இயக்கும்போது, பக்கத்து அரண்மனை வீட்டில் ஒரு சூனியக்காரக் கிழவியின் கட்டுப்பாட்டில் வாழும் மினியேச்சர் கலைஞர் பிரக்ருதியின் அழகு அவன் கண்ணில் படுகிறது. அவளது அழகில் மயங்கும் ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியான கவிதைகள் பாடி, பொம்மைகளை பரிசளித்து காதலை வெளிப்படுத்துகிறார்கள்.
இன்னொரு பக்கம், எந்தப் பெண்ணிடம் காதலைச் சொன்னாலும் அவள் அடுத்த கணமே இறந்துவிடுவாள் என்ற விசித்திர சாபத்துடன் சுற்றும் இன்ஸ்பெக்டர் எப்படியாவது திருமணம் செய்ய துடிக்கிறார். வெளிப்புற அழகைத் தேடி அலைவதால், தன்னை பல வருடங்களாக ஆழமாகக் காதலிக்கும் தோழி ரஷ்ஷின் உணர்வுகளை கிஷ்ஷால் புரிந்து கொள்ள முடிகிறதா? இந்த குழப்பங்களுக்கு இடையே கிஷ்ஷின் காதல் என்னவாகிறது? என்பதே ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மீதிக்கதை
மொத்தத்தில் ‘ட்ரோன்ஸ்’ – விசித்திரக் காதல்!
மதிப்பீடு : 4 / 5
நடிகர்கள் : டிராவிட் செல்வம் , அஞ்சலி நாயர் , ஆர்.ஜே. தீபக் , சித்தி இத்னானி, முகமது குரேஷி , சினிமாவாலா சதீஷ் , தேவதர்ஷினி.
இசை : ஹரி S R
இயக்கம் : ஆர். ராகவ் மிர்தாத்
தணிக்கை சான்றிதழ்: U/A (13+)
மக்கள் தொடர்பு : AIM சதீஷ்
