கே.ஜெ.பி டாக்கீஸ் – கே.ஜெ.பாலமணிமர்பன், அணில் கே.ரெட்டி தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, அஷ்வின், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், கே.ஜெ.பாலமணிமர்பன், விக்னேஷ் கார்த்திக், பிரிகிடா, சஞ்சனா திவாரி, பவானி ஸ்ரீ, அமர், ராபின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஹாட் ஸ்பாட் 2 மச்’
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தில் தயாரிப்பாளரிடம் இயக்குனர் கதையை சொல்வது போல சென்று தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்வது போல் கதை முடிகிறது. இந்த ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தின் ஆரம்பத்தில் அதே தயாரிப்பாளரிடம் பெண் இயக்குனராக ப்ரியா பவனி சங்கர் கதை செய்வது போல் படம் தொடங்குகிறது..
முதல் கதையில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் தன்யா இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். ராசா என்ற முன்னணி நடிகரின் தீவிர ரசிகராக இருக்கிறார். மறுபுறம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரக்ஷன் மற்றொரு முன்னணி நடிகரான தாதாவின் தீவிர ரசிகராக இருக்கிறார்.
இந்த ராசா – தாதா நடிகரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நேரத்தில் ஆதித்யா மனைவி தன்யாவையும் ரக்ஷன் பெற்றோர்களையும் மர்ம மனிதர் கடத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். மர்ம மனிதர் யார் ? ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா?
இரண்டாம் கதையில் வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்துவிட்டு சென்னை வரும் சஞ்சனா திவாரி காதலருடன் வருவதை பார்க்கும் அப்பா தம்பிராமையா அதிர்ச்சி அடைகிறார். இப்பபடி சில நாட்கள் கடந்த நிலையில் சஞ்சனாவின் பிறந்தநாள் அன்று அப்பா தம்பிராமையா மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார். தம்பிராமையா கொடுத்த அதிர்ச்சி என்ன?
மூன்றாம் கதை. 2025 ல் வாழும் அஸ்வின் தடவை டிராவல் மூலமாக 2050 வாழும் பவானி ஸ்ரீயுடன் பேசி பல அது காதலாக மலர்கிறது. இருவரும் தடவை டிராவல் முலம் சந்திக்க இருவருக்கும் அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . அந்த அதிர்ச்சி என்ன ?
இறுதியில் ப்ரியா பவானி சங்கர் தயாரிப்பாளரை சந்திக்க வந்ததற்கான உண்மையான காரணத்தை சொன்னாரா? இல்லையா? என்பதே ’ஹாட் ஸ்பாட் 2 மச்’
படத்தின் மீதிக்கதை.
கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் உட்கார்ந்த இடத்த்திலேயே உணர்வு ஊர்வமான நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
இன்றைய ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர் , ரசிகர்களான நடித்திருக்கும் ஆதித்யா ,ரக்ஷன் தீவிர ரசிகர்களை நினைவுபடுத்துகிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் தம்பிராமையா நடிப்பு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அவரது மகளாக வரும் சஞ்சனா திவாரி , அஸ்வின் , பவானி ஸ்ரீ ,கே.ஜெ.பாலமணிமர்பன், விக்னேஷ் கார்த்திக், பிரிகிடா, சஞ்சனா திவாரி, பவானி ஸ்ரீ, அமர், ராபின் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் இசை பாடல் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
வெறித்தனமான ரசிகர்கள், பெண்ணின் சுதந்திரம், நாகரிகம், மரியாதை, காதல், டைம் டிராவல் என அனைத்தையும் கலந்து ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’ஹாட் ஸ்பாட் 2 மச்’ – சொல்ல மறந்த கதை.
மதிப்பீடு : 3.30/5
நடிகர்கள் : பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, அஷ்வின், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர்,
இசை : சதிஷ் ரகுநாதன்
இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்
மக்கள் தொடர்பு : வேலு