Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 21 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

Bamboo Trees Productions சார்பில் தயாரிப்பாளர் T. ஜீவிதா கிஷோர் பேசியதாவது…

இந்தப் படத்தின் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இது முழுமையான ஹாரர் படமாக இருக்கும். சாண்டி அண்ணாவிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள், கௌதம் மேனன் சார் மிகப்பெரும் ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படம் அக்டோபர் 21 ந்தேதி வருகிறது. அனைவரும் தியேட்டர் வந்து பார்த்து ரசியுங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன் பேசியதாவது…

இப்படம் முழுக்கவே சீரியஸான ஹாரர் மூவி, சாண்டி மாஸ்டர் எங்கேயும் காமெடி செய்திருக்க மாட்டார். நம்பிக்கை சந்துரு மிக வித்தியாசமான திரைக்கதை செய்துள்ளார். படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசியதாவது…

இது எனக்கு இரண்டாவது படம், சந்துருவுடன் முதல் சந்திப்பே வித்தியாசமாக இருந்தது. கதை சொல்லும் போதே நடித்து காட்டி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறிது காலம் அவரை காணவில்லை திரும்ப வந்து, அவரது அக்கா தயாரிக்கிறார் என்று சொன்னார். இப்படத்தில் இசையில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ் சூப்பராக ஒளிப்பதிவு செய்திருந்தார். சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு பிறகு பெரிய இடத்திற்கு செல்வார். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நாயகி ஸ்ருதி செல்வம் பேசியதாவது…

என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்கிற’ என்று தான் கேட்டார்கள். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். சாண்டி மிகப்பெரிய ஆதரவை தந்தார். நடிக்கும் போது மிக உதவியாக இருந்தார். நம்பிக்கை சந்த்ரு கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். Bamboo Trees Productions நிறுவனத்தின் தூண் T.ஜீவிதா கிஷோர் தான். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

Sandy Master Speech at 3:33 Movie Press Meet

Leave a Reply

Your email address will not be published.